- Advertisement 3-
Homeவிளையாட்டுஇஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன்.. உலகக்கோப்பைக்கான பேப்-அப் வீரர்கள்.. ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா

இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன்.. உலகக்கோப்பைக்கான பேப்-அப் வீரர்கள்.. ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா

- Advertisement 1-

நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ல் தொடங்கி நவ.19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து செய்து வருகின்றன. அதேபோல் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகள் திட்டமிட தொடங்கிவிட்டன.

அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உலகக்கோப்பைத் தொடருக்கான பேக் அப் வீரர்களாக யார் யாரை தேர்வு செய்வது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

ஏனென்றால் பேக் அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் தொடக்க வீரருக்கான ரேஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்திருக்கிறார். அதேபோல் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் மூவரும் ஒரே போட்டியில் ஆடினால் பேட்டிங் டெப்த்தில் இல்லாமல் பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் ஜடேஜாவுக்கு பின் இரண்டாவது ஸ்பின்னராக சாஹல் ஆடினால் குல்தீப்பை களமிறக்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல் ஜடேஜாவுக்கான பேக் அப் வீரராக அக்சர் படேல் அணியில் இருக்க வேண்டும் என்று ஏராளமான சிக்கல் நிலவி வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரும் தயாராக இருக்கிறார்கள்.

- Advertisement 2-

இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவதற்குள் அனைத்து குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளாது. அந்த வகையில் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து இஷான் கிஷனுக்கு ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனின் செயல்பாடுகளை பொறுத்தே அவர் ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா என்று தெரிய வரும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சற்று முன்