- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணி விக்கெட் கீப்பர் யார்? சஞ்சு சாம்சன் vs இஷான் கிஷன்.. யாருக்கு வாய்ப்பு?

இந்திய அணி விக்கெட் கீப்பர் யார்? சஞ்சு சாம்சன் vs இஷான் கிஷன்.. யாருக்கு வாய்ப்பு?

- Advertisement 1-

2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்று கைப்பற்றியுள்ள நிலையில், இன்று ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. இன்னும் இரு மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்திய அணியை பொறுத்தவரை உலகக்கோப்பைத் தொடருக்கான பேக் அப் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார் என்பது மட்டுமே கேள்வியாக உள்ளது. இதில் பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவரும் போட்டியில் உள்ளனர். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான ரேஸில் சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இரு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் தொடக்க வீரருக்கான இடத்தில் கில் – ரோகித் இருக்கிறார்கள். இதனால் இஷான் கிஷனை மிடில் ஆர்டரில் களமிறக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் இஷான் கிஷன் இதுவரை ஒருநாள் தொடர்களில் மிடில் ஆர்டரில் களமிறங்கியதில்லை. அண்மையில் நடந்த டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அரைசதம் விளாசி ஃபார்மில் இருப்பதாக காட்டியுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் ஏற்கனவே மிடில் ஆர்டரில் களமிறங்கி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளுடன் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

- Advertisement 2-

மிடில் ஆர்டரில் இடதுகை வீரரான ஜடேஜா இருப்பதால், டாப் ஆர்டரிலேயே இடதுகை பேட்ஸ்மேன் அவசியமாக இருக்கிறார். இதனால் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் – இஷான் கிஷன் இருவரில் யாரை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான அணியை முடிவு செய்வதில் இந்த தொடர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவரும் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்