Homeகிரிக்கெட்நாங்கள் வெற்றியதோடு துவங்குவோம் என இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ள ஆஸி வீரர்...

நாங்கள் வெற்றியதோடு துவங்குவோம் என இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ள ஆஸி வீரர் ஸ்காட் போலண்ட்.

-Advertisement-

டெஸ்ட் அணிகளை பொறுத்தவரை நீண்ட ஆண்டுகளாக பலம் வாய்ந்த அணிகளாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இருந்து வருகின்றன. இரு அணிகளிலும் திறமைமிக்க பல வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் இரு அணிகளும் நாளை தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பெற்று இப்போது இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகின்றன. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரு அணி வீரர்களும் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-Advertisement-

இங்கிலாந்தின் குளிர்கால வானிலை ஆஸி அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என சொல்லலாம். ஆனால் இந்திய அணியோ இரண்டு மாதங்கள் கடும் கோடையில் ஐபிஎல் விளையாடிவிட்டு இங்கிலாந்து சென்றுள்ளது. அதனால் வானிலை மாற்றம் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.

ஆஸி அணியில் கடைசி நேரத்தில் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் இணைவார் என தெரிகிறது. 34 வயதாகும் போலண்ட் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து அவர் பேசியுள்ளார்.

-Advertisement-

அவரின் பேச்சில் “எனது பெயரை முன்வைப்பதில் நான் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு வயது 34 ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் கற்றுக் கொண்டிருப்பது போல் தான் நான் உணர்கிறேன். பயிற்சியிலோ அல்லது சென்டர் விக்கெட்டுகளிலோ பந்துவீசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவேன். நான் நிறைய விளையாட வேண்டியவன் இல்லை. தொடருக்கு முன் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாததன் மூலம் நான் முழுவதையும் இழக்கிறேன் என நினைக்கவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் எங்கள் அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளோம். இந்த பெரிய விளையாட்டில் எங்களுக்கான குளிர்காலத்தை நாங்கள் வெற்றியோடு தொடங்குவோம். இங்கிலாந்து கண்டிஷனில் என்னால் சிறப்பாக செய்லபட முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: பாப் டூ பிளெசிஸ் என்கிட்ட செம நக்கலா பேசினாரு. அந்த தொடரின் போது இதெல்லாம் தான் நடந்தது. மனம் திறந்த பயிற்சியாளர் ராஜாமணி

இங்கிலாந்து உண்மையில் கிரிக்கெட் விளையாட ஒரு நல்ல இடம். இங்கு பந்து நன்றாக வருகிறது. நான் உண்மையில் புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் உணர்கிறேன். இங்கிலாந்தில் என்னுடைய திறமையை சோதிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என அவர் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்