- Advertisement -
Homeவிளையாட்டுதோனி சூப்பர் கேப்டனா இருக்கலாம்.. ஆனா அவரை விட டாப் யாரு தெரியுமா.. முன்னாள் சிஎஸ்கே...

தோனி சூப்பர் கேப்டனா இருக்கலாம்.. ஆனா அவரை விட டாப் யாரு தெரியுமா.. முன்னாள் சிஎஸ்கே வீரரே சொல்லிட்டாரே..

- Advertisement-

சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் தான் எம். எஸ். தோனி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலான போதிலும் இன்னும் தோனி மீதான கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்றது, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது என தோனியின் தலைமையில் இந்திய அணி செய்த அற்புதங்கள் இன்னும் பல காலங்கள் நிலைத்து நிற்கக் கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

ஆரம்பத்தில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடியிருந்த தோனி, பின்னர் கேப்டன் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக் கொண்டு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் வலம் வந்திருந்தார். ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ் என இந்திய அணியில் புதுப்புது கேப்டன்கள் உருவானாலும் தனியாளாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் தோனி படைத்து உருவாக்கிய தாக்கத்தை இனி ஒரு இந்திய வீரர்களால் படைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது கேள்விக்குறி தான்.

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வழிநடத்தி வந்த தோனி கடந்த ஆண்டு வரை அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வெல்ல உதவி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடருக்கு முன்பாக ருத்துராஜை புதிய கேப்டனாக சிஎஸ்கே நியமிக்க தோனி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடி வருகிறார்.

இருந்தாலும் 43 வயதாகும் தோனி விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஓய்வினை அறிவிப்பார் என்பதால் இன்னொரு கேப்டனை தயார் செய்வதற்காக அவர் அந்த பதவியில் இருந்த மாறியது ரசிகர்கள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே நியூசிலாந்தின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் இணைந்து ஆடியவருமான ஸ்காட் ஸ்டைரிஸ் சிறந்த கேப்டன் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

ஸ்காட் ஸ்டைரிஸிடம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஸ்டீபன் பிளெம்மிங், தோனி மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய மூன்று பேரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் தெரிவித்த ஸ்டைரிஸ், “நீங்கள் லம்போகினி, ஃபெராரி மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் ஆகிய கார்களில் எது சிறந்த கார் என தேர்வு செய்ய சொல்கிறீர்கள். ஆனால் நான் ஸ்டீபன் ப்ளெம்மிங்கை தான் தேர்வு செய்வேன்.

ஏனென்றால் அவரது தலைமையில் தான் எனது கிரிக்கெட் பயணத்தை நான் அதிகமாக ஆடியுள்ளேன். அதே வேளையில் சென்னை அணிக்கு குறைந்த போட்டிகள் மட்டும் தான் நான் விளையாடி உள்ளேன். வேலையின் அளவை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் தோனியை விட ஸ்டீபன் ப்ளெம்மிங் பெயரை தான் கூறுவேன்.

தோனி, கில்க்ரிஸ்ட் மற்றும் பிளெம்மிங் என மூன்று பேரும் ஒரே ஸ்டைலில் மிக கேப்டன்சியை அற்புதமாக கையாண்டனர். இந்த மூன்று பேருமே வீரர்களை சிறப்பாக வழிநடத்துவதில் நான் கண்ட சிறந்த கேப்டன்கள்” என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்