- Advertisement 3-
Homeவிளையாட்டு2 ஓவரில் 35 வேணும்.. ட்விஸ்ட் வெச்ச ரஷீத் - தெவாட்டியா.. கடைசி பந்தில் நடந்த...

2 ஓவரில் 35 வேணும்.. ட்விஸ்ட் வெச்ச ரஷீத் – தெவாட்டியா.. கடைசி பந்தில் நடந்த பிபி-ஐ எகிற வெச்ச சம்பவம்..

- Advertisement 1-

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த சீசனில் சற்று தடுமாறி வருகிறது என்றே சொல்லலாம். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக 5 போட்டிகள் ஆடியிருந்த குஜராத் அணி, அதில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தை பிடித்திருந்தது. அந்த அணியில் கில், ரஷீத் கான், மோஹித் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்கள் இருந்தபோதிலும் சில தவறுகளால் அந்த அணி தொடர்ந்து தோல்விகளையும் சந்தித்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தங்களின் ஆறாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் எதிர்கொண்டிருந்தனர். மறுபுறம் ராஜஸ்தான் அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் இருந்து குஜராத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனைத் தொடர்ந்து கைகோர்த்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிக அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 180 ரன்கள் சேர்ப்பதே ராஜஸ்தான் அணிக்கு கடினமாக இருந்த சூழலில் தான் இருபது ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களையும் எடுத்திருந்தனர். கடந்த சில சீசன்களில் சிறப்பாக ஆடாததால் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த இளம் வீரர் ரியான், இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் லைன் அப்பில் முதுகெலும்பாக இருந்து வருகிறார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடிய அவர், 76 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த சஞ்சு சாம்சன், 68 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்திலும் இருந்தார். இருவரின் ஆட்டத்தால் அந்த அணி 196 ரன்கள் குவிக்க தொடர்ந்து கடின இலக்கை நோக்கி குஜராத் அணியும் தங்களின் பேட்டிங்கை தொடங்கியிருந்தது.

- Advertisement 2-

மிக நிதானமாக ஆடிய குஜராத் அணி, 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 76 ரன்களை எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 35 ரன்களில் அவுட்டாக, கில் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தபடி இருந்தார். இதனால், கடைசி 10 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 121 ரன்களும் தேவைப்பட்டது.

விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், குஜராத்திற்கும் வெற்றி வாய்ப்பு இருக்க, சாய் சுதர்சன் விக்கெட்டை கைப்பற்றிய குல்தீப் சென், மேத்யூ வேடை 4 ரன்னிலும், அபினவ் மனோகரை 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் எடுத்து அந்த வாய்ப்புக்கும் ஆப்பு வைத்தார். தனியாக போராடிக் கொண்டிருந்த கில்லும் 72 ரன் எடுத்து அவுட்டாக, குஜராத்தின் வெற்றிக்கு 28 பந்துகளில் 64 ரன்கள் வேண்டுமென்றே நிலை இருந்தது.

ஷாருக்கான் மற்றும் தெவாட்டியா சிறிய கேமியோ கொடுக்க, கடைசி 2 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் வேண்டுமென்ற நிலை உருவானது. களத்தில் தெவாட்டியா மற்றும் ரஷீத் கான் இருந்தனர்.

19 வது ஓவரில் ராகுல் தெவாட்டியா உதவியுடன் 20 ரன்கள் சேர்க்கப்பட, 6 பந்துகளில் 15 ரன்கள் வேண்டுமென்ற பரபரப்பான நிலையும் உருவானது. இந்த ஓவரை ஆவேஷ் கான் வீச, குஜராத் அணிக்கு கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ரசிகர்களும் இருக்கையின் நுனிக்கே செல்ல, கடைசி பந்தில் ஃபோர் எடுத்து முடித்து வைத்தார் ரஷீத் கான். ராஜஸ்தான் அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வியாகவும் இது அமைந்து போனது.

சற்று முன்