- Advertisement -
Homeவிளையாட்டுIPL 2023: ‘ஜெயிச்சா கொண்டாடு, தோத்தா கம்முன்னு இரு’- கம்பீர் & கோலி மோதல் குறித்து...

IPL 2023: ‘ஜெயிச்சா கொண்டாடு, தோத்தா கம்முன்னு இரு’- கம்பீர் & கோலி மோதல் குறித்து சேவாக் கருத்து!

- Advertisement-

நேற்று முன் தினம் நடந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக நடந்து முடிந்தது. போட்டி முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த போட்டி சம்மந்தமான சர்ச்சைகள் ஓயவில்லை. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மந்தமான இந்த லோ ஸ்கோர் போட்டியில் நடந்த நாடகீய தருணங்கள் வீரர்கள் மட்டும் இல்லாமல் இரு அணி ரசிகர்களையும் கொதிநிலையில் வைத்துள்ளது.  கோலிக்கும் கம்பீருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டே இதுபோல மைதானத்திலேயே ஆக்ரோஷமான மோதல் உருவானதை ஐபில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி  தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி கோலியிடம் கம்பீர் ‘நீ  என் வீரர்களிடம் என்ன சொன்னாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கோலி “உங்களிடம் நான் எதுவும் பேசாத போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார்.

அதற்குக் கம்பீர் “நீ என் அணி வீரர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என் குடும்பத்தைப் போன்றது.” எனக் கூறவே, பதிலுக்கு கோலி துடுக்காக “அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு கம்பீர் “நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறாயா?” எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது.

- Advertisement-

இந்நிலையில் இருவரின் இந்த மோதல் குறித்து முன்னாள் வீரர்களான கவாஸ்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இப்போது சேவாக் தன்னுடைய ஸ்டைலில் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “மைதானத்தில் நடந்த சரியானது இல்லை. வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும், தோல்வி பெற்ற அணி தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏன் வார்த்தை மோதலில் ஈடுபட வேண்டும். அவர்கள் இருவருமே இந்தியாவின் அடையாளங்கள். அவர்களின் செயல்கள் பின்தொடரும் பல கோடி ரசிகர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என அறிவுரை கூறியுள்ளார். சேவாக், கோலி மற்றும் கம்பீர் ஆகிய மூவருமே டெல்லியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்