- Advertisement -
Homeவிளையாட்டுநான் ஸ்லோ பீல்டரா? தோனிக்கு பொதுவெளியில் மொக்கை கொடுத்த சேவாக். மீண்டும் பேசுபொருளாகும் சேவாக்கின் பழைய...

நான் ஸ்லோ பீல்டரா? தோனிக்கு பொதுவெளியில் மொக்கை கொடுத்த சேவாக். மீண்டும் பேசுபொருளாகும் சேவாக்கின் பழைய பேச்சு

- Advertisement-

இந்திய அணி 2011/2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடிய சீரிஸ் இந்திய அணிக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஏனென்றால் அந்த தொடரில்தான் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோர் விடைபெற, கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தனர்.

அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் தோற்றது. அதே போல நடந்த ஒருநாள் முத்தரப்பு போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறவில்லை. இப்படி மோசமான தோல்விகளோடு இந்திய அணி நாடு திரும்ப வேண்டி இருந்தது.

அப்போது தோல்விக்கான காரணம் குறித்து பேசிய இந்திய அணிக் கேப்டன் தோனி தோல்விக்கு முக்கியக் காரணம் ஸ்லோ பீல்டர்ஸ்தான் எனக் கூறியிருந்தார். அப்போது அணியில் இருந்த சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை குறிப்பிட்டு தோனி இதை சொல்லி இருந்தார் என கிசுகிசுக்கப்பட்டது.

இதுபற்றிய தோனி பேச்சில் “நான் அந்த மூன்று பீல்டர்களை பற்றி மட்டும் சொல்லவில்லை. அணியில் மேலும் சில வீரர்கள் ஸ்லோவாக உள்ளனர்.  சொல்லப்போனால் அணியில் ஒன்றிரண்டு சிறந்த பீல்டர்களே உள்ளனர். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த சூழ்நிலைக்கும், பெரிய கிரவுண்ட்டுக்கும்  ஏற்ப அவர்கள் வேகமாக இல்லை.” எனக் கூறியிருந்தார்.

- Advertisement-

தோனி இப்படி பேசி சில நாட்களுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், தோனி இல்லாத காரணத்தால் சேவாக் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தினார். அப்போது அவர் அந்த போட்டியில் ஒரு அபாரமான டைவிங் கேட்ச்சை பிடித்து அசத்தினார். சேவாக் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் பிடித்த மிகச்சிறந்த கேட்ச்களில் அதுவும் ஒன்று.

அந்த போட்டி முடிந்ததும் அவர் தோனியை சீண்டும் விதமாக ஒரு கமெண்ட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் பத்திரிக்கையாளரிடம் “நீங்கள் என்னுடைய கேட்ச்சை பார்த்தீர்களா?” எனக் கேட்க, பத்திரிக்கையாளர்கள் சிரிக்கின்றனர். தொடரும் சேவாக் “தோனி அடுத்த போட்டிக்கு முன்பாக இங்கு வருவார். அப்போது அவரிடம் இதுபற்றி நீங்கள் கேளுங்கள்” என கூறினார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்