உலகக் கோப்பை 2023 இந்தியாவின் அகமதாபாத், ஹைதராபாத், தரம்சலா, டெல்லி, சென்னை, லக்னம், பூனே, பெங்களூரு ,மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அரையிறுதி போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும், இறுதிப் போட்டியானது அகமதாபாத்திலும் நடக்க உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அக்டோபர் 8 அன்று சென்னையில் விளையாட உள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் சீக்கிரமாக விற்று தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகக் கோப்பை நடைபெற உள்ள பல நகரங்களில் ஹோட்டல் ரூம்களும் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் 50 ஒவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா கடைசியாக 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்றது.
2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருந்த போதிலும் அதனால் கோப்பையை வெல்ல முடியாமல் அரை இறுதியில் தோற்று வெளியேறியது. எனவே நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையில் இந்திய அணி பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது, இதுதான் இந்திய ரசிகர்களின் கனவாகும். உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் சொந்த மண்ணில் நடப்பது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் கூறுகையில்: இந்தியாவில் மைதானங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிச்சயமாக அதிக ரன்களை குவிக்க பிராகசமான வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
“இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவிக்கக்கூடிய இரண்டு மூன்று தொடக்க வீரர்கள் உள்ளனர் ஏனெனினும் நான் ரோகித் சர்மாவை தேர்வு செய்கிறேன், அவர் இந்தியர் என்பதால் என வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்”.விராட் கோலி தலைமையில் விளையாடிய ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்தது நினைவுக்கூரத்தக்கது.
ஆரம்ப காலகட்டத்தில் மிடில் ஆடர் பேட்ஸ்மனாக களம் இறங்கிய ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை, பின்பு தொடக்க வீரராக அவர் களமிறங்கி பட்டையை கிளப்பி வந்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு பல கோப்பைகளை பெற்று தந்த ரோகித் சர்மா வரவிருக்கும் 50 ஒவர் உலக கோப்பையிலும் சிறப்பாக வழி நடத்துவது மட்டுமில்லாமல் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று தருவார் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.