- Advertisement 3-
Homeவிளையாட்டுதவான் ஜொலிக்க காரணமாக இருந்த தோனி.. சேவாக்கை நீக்கிவிட்டு எடுத்த ரிஸ்க்.. கவனிக்க வைத்த வாழ்த்து...

தவான் ஜொலிக்க காரணமாக இருந்த தோனி.. சேவாக்கை நீக்கிவிட்டு எடுத்த ரிஸ்க்.. கவனிக்க வைத்த வாழ்த்து பதிவு..

- Advertisement-

இன்று ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பது ஷிகர் தவான் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்தது தான். டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிய அளவில் ஆடாமல் இருந்து வந்த ஷிகர் தவான், கடைசி சர்வதேச போட்டியை கடந்த 2022 ஆம் ஆண்டு ஆடி இருந்தார்.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த சூழலில் தான் இளம் வீரர்களின் தாக்கம் இந்திய அணியில் அதிகம் இருக்க அப்படியே ஓரம் கட்டப்பட்டு விட்டார். சர்வதேச போட்டிகளில் கோலி, ரோஹித் ஷர்மா இருவருடன் இணைந்து ஷிகர் தவான் அமைத்த பார்ட்னர்ஷிப்பை எந்த காலத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

- Advertisements -

அதே போல ஐசிசி தொடர் என வந்து விட்டாலே வேறொரு அவதாரம் எடுக்கும் ஷிகர் தவானை தான் நம்மால் பார்க்க முடியும். இந்திய அணி தோற்கும் சூழலில் இருந்த போட்டிகளில் கூட ரன் குவிப்பில் ஈடுபட்டு ரசிகர்கள் மனதை நெகிழ வைத்திருந்தார் ஷிகர் தவான். இந்திய தொடக்க பேட்ஸ்மேனாக வெளிநாட்டு மண்ணிலும் நிறைய சாதனைகளை படைத்துள்ள ஷிகர் தவான், ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பைத் தொடர்களிலும் நிறைய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

இதனிடையே, அவரது ரசிகர்கள் தவானின் ஓய்வு முடிவால் கலங்கி போய் நிற்க, சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், லட்சுமண் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், இந்திய அணியில் கொடுத்த பங்களிப்பிற்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஷிகர் தவானின் ஓய்வு பற்றி இந்திய அணியின் தொடக்க வீரராக பட்டையை கிளப்பிய சேவாக் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“மொஹாலியில் நடந்த போட்டியில் எனது இடத்திற்கு மாற்று வீரராக நீங்கள் எப்போது களமிறிங்கினீர்களோ அதிலிருந்து உங்கள் பயணம் முழுவதும் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஓவ்வொரு ஆண்டிலும் டாப் பர்ஃபாமன்ஸ் தான் நிறைந்திருந்தது. இனி உள்ள வாழ்க்கையை மிக வேடிக்கையாகவும், ரசித்தும் வாழுபடி வாழ்த்துகிறேன்” என சேவாக் ஷிகர் தவான் ஓய்வு முடிவு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் நிதானமாக ஆடி தான் ரன் சேர்ப்பார்கள். ஆனால், சேவாக் அந்த பாணியில் இருந்து மாறி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு பின்னர் அதே இடத்தில் ஆடி வந்த ஷிகர் தவான், முதல் டெஸ்டிலேயே 85 பந்துகளில் சதமடித்து உலகளவில் கிரிக்கெட் வீரர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்தார்.

ஆனால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்த ஷிகர் தவானை தொடக்க வீரராக மாற்றி அழகு பார்த்து இன்று உலக அரங்கில் முன்னணி வீரராக அவர் மாறியிருக்க, அப்போது கேப்டனாக இருந்த தோனியின் பங்கு மிகப்பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்