- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் வரலாற்றில்.. இன்னும் உடையாமல் இருக்கும் சேவாக்கின் ரெக்கார்ட்.. கோலி, ரோஹித்தால கூட முடியலையே..

ஐபிஎல் வரலாற்றில்.. இன்னும் உடையாமல் இருக்கும் சேவாக்கின் ரெக்கார்ட்.. கோலி, ரோஹித்தால கூட முடியலையே..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் இன்றைய காலகட்டத்தில் அதிரடி ஆட்டம் என்ற ஒரு பெயர் வந்து விட்டது. பந்து வீச்சாளர்கள் மிக குறைவாகவே இந்த தொடரில் விக்கெட்டுகளை எடுத்து பட்டையைக் கிளப்பும் சூழலில் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமாகவும் ஐபிஎல் தொடர் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக சில போட்டிகளில் இரண்டு ஓவர்களில் 50 ரன்கள் வேண்டும் என்றால் கூட பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறும் ஒரு நிலையும் இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலகட்டத்தில் கூட மெக்கல்லம், சேவாக், கெயில், டிவில்லியர்ஸ் என அணிகளிலுமே பல அதிரடி வீரர்கள் நிரம்பி வழிந்தனர். உதாரணத்திற்கு ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். இதனால் ஐபிஎல் தொடர் ஒரு ஃபுல் மீல்ஸாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தவர் தான் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

இவர் டெஸ்ட் மேட்ச் என்றாலும் கூட முதல் பந்திலேயே பவுண்டரி எடுத்து ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் தான் ஈடுபடுவார். டெஸ்ட் போட்டிகளில் கூட குறைந்த பந்துகளில் இரட்டை சதம், முச்சதம் அடிப்பதே வேலையாக வைத்திருந்த சேவாக், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி 9 ஆண்டுகள் ஆன போதிலும் ஒரு சாதனையை இன்னும் தன் வசமாக வைத்துள்ளது பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதி இருந்த போட்டிக்கு நடுவே ஒரு மிக முக்கியமான புள்ளி விவரங்கள் பற்றி காண்பிக்கப்பட்டது. அதில் சேவாக் பெயர் முதலிடத்தில் இருந்திருந்தது தான் அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

- Advertisement 2-

ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி குறைந்தபட்சம் ஆயிரம் ரன்கள் அடித்துள்ள வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ளவர்களின் பட்டியல் காண்பிக்கப்பட்டது. இதில் இரண்டாம் இடத்தில் க்றிஸ் கெயில் 151 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் முறையே ஜோஸ் பட்லர் 149 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், ஜெய்ஸ்வால் 148 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் இருந்தனர்.

இதில் கெயில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை பெற்றிருந்தார். மேலும் இந்த வரிசையில் முதல் இடத்தில் முன்னாள் இந்திய வீரர் சேவாக் 157 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஆடியிருந்தார். அதன் பின்னர் ஓய்வு பெற்ற நிலையில் ஒன்பது ஆண்டுகளில் ஏறக்குறைய 500 ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும் சேவாக்கின் தொடக்க வீரராக சேவாக்கின் சாதனை மற்ற எந்த ஒரு தொடக்க வீரர்களும் தொட முடியாத விஷயம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

சற்று முன்