- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக் இல்ல.. ரோஹித் ஆட முடியாம போனா அவரை கேப்டனா போடுங்க.. சேவாக் கைகாட்டிய இளம்...

ஹர்திக் இல்ல.. ரோஹித் ஆட முடியாம போனா அவரை கேப்டனா போடுங்க.. சேவாக் கைகாட்டிய இளம் வீரர்..

- Advertisement 1-

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் தற்போது டி20 உலக கோப்பையை யார் வெல்ல போகிறார்கள் என்பதன் மீது தான் உள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ள நிலையில் இதில் நான்கு அணிகளுமே கோப்பையை வெல்ல தகுதியுடைய அணிகளாக தான் உள்ளனர்.

அதிலும் லீக் சுற்றிலேயே வெளியேற வேண்டிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் வெற்றியின் காரணமாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்து மீண்டும் ஒருமுறை அதிர்ஷ்டத்தால் அரை இறுதிக்கும் நுழைந்துள்ளது. இவர்கள் நடப்புச் சாம்பியன் என்பது மற்றொரு பலமாக இருக்க அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பலரும் அவர்கள் தான் கோப்பையை வெல்வார்கள் என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் அசுர பலத்துடன் விளங்கும் இந்திய அணி நிச்சயம் இந்த முறை நாக் அவுட் போட்டிகளில் சொதப்பாமல் கோப்பையை தட்டி தூக்குவதில் கவனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருக்க பொருத்தமுள்ள வீரர் பற்றி சேவாக் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி ஜிம்பாப்வேவுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

- Advertisement 2-

இதற்கான கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கே எல் ராகுல், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒரு பக்கம் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சுப்மன் கில் குறித்து தான் தற்போது சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“சுப்மன் கில் நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட போகிறார். அதுமட்டுமில்லாமல் மூன்று வடிவிலான கிரிக்கெட்டும் ஆடக்கூடிய தகுதி உள்ள வீரரும் அவர்தான். கடந்த ஆண்டு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்தாலும் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறாமல் போனது சோகம் தான். என்னை பொறுத்தவரையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது நிச்சயம் சிறந்த முடிவு தான். ரோஹித் ஷர்மா ஏதாவது தொடரில் ஆட முடியாமல் போனாலும் அவரது கேப்டன் இடத்திற்கு பொருத்தமான வீரராக கில் இருப்பார்” என சேவாக் கூறியுள்ளார்.

அதேபோல ஐபிஎல் தொடர் அடிப்படையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது பற்றி பேசிய சேவாக், “அதில் என்ன தவறு இருக்கிறது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் தான் சர்வதேச அளவுக்கு தேர்வாகியுள்ளார்கள். இதுபோன்ற தொடர்கள் மூலம் தான் இவர்கள் சர்வதேச அளவில் எப்படி ஆடுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என சேவாக் கூறியுள்ளார்.

சற்று முன்