- Advertisement 3-
Homeவிளையாட்டுஇருக்கறதுலயே மோசமான தோல்வி அது தான். திரும்பி வர டிக்கெட் கூட இல்ல. ரெண்டு நாள்...

இருக்கறதுலயே மோசமான தோல்வி அது தான். திரும்பி வர டிக்கெட் கூட இல்ல. ரெண்டு நாள் ரூம்லயே அடஞ்சி கிடந்தன். பல வருட சோகத்தைப் பகிர்ந்த சேவாக்

- Advertisement 1-

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்த முறை முழுக்க முழுக்க அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடக்க உள்ளன. கடந்த முறை அரையிறுதி போட்டியோடு தோற்று வெளியேறிய இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பாக சொந்த நாட்டிலேயே தொடர் நடக்கிறது

இந்திய அணி மிக வலுவான அணியாக இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையும் வெல்லாமல் போராடி வருகிறது. கடைசியாக 2013 ஆம் அண்டு ஐசிசி சாம்பியன் கோப்பையை வென்றது. அதற்கு முன்னால் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றது.

அதன் பிறகு 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும், இந்திய அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற 2011ஆம் ஆண்டு அந்த அணியில் இடம்பெற்ற சேவாக் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தன்னால் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவின் மோசமான தோல்வி என்றால் அது 2007 ஆம் ஆண்டு தோல்விதான். அந்த சீசனில் இந்திய அணி லீக் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணியிடம் தோற்று பெர்முடா அணியோடு மட்டுமே வெற்றி பெற்று, லீக் போட்டிகளோடு வெளியேறியது.

- Advertisement 2-

ஆனால் அந்த ஆண்டில் வந்த அணிகளிலேயே உலகின் சிறந்த அணி இந்திய அணிதான் என்று சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “அந்த சீசனில் உலகின் சிறந்த அணியாக நாங்கள் சென்றோம். கண்டிப்பாக நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோற்றோம். அந்த தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு அது மிகுந்த வேதனையை கொடுத்தது.

நாங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என்று எல்லோரும் நினைத்தார்கள். அதனால் டிக்கெட் கூட புக் செய்யவில்லை. ஆனால் நாங்கள் லீக் ஸ்டேஜில் வெளியேறினோம். இதனால் டிக்கெட் கிடைக்க 2 நாட்கள் ஆனது. அந்த 2 நாட்களும் நான் ஹோட்டல் ரூமிலேயே அடைந்து கிடந்தேன். ரூம் சர்வீஸ், ஹவுஸ் கீப்பிங் இப்படி யாரையும் நான் அறைக்குள் அனுமதிக்கவில்லை. என் உறவினர்கள்தான் என்னை தேற்றினார்கள். அதன் பின்னர்தான் நான் ஹோட்டலில் இருந்து வெளியேறினேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: கடைசி ஓவர்ல எப்படி ஆடுனா கேம்ம முடிக்கலாம்னு தோனி என்கிட்ட சொன்ன ரகசியம் இது தான் – ரிங்கு பகிர்ந்த சூப்பர் தகவல்

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியில் சச்சின், சேவாக், தோனி, யுவ்ராஜ், கங்குலி, அனில் கும்ப்ளே, ஜாகீர்கான் என பல ஜாம்பவான்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்