- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க என்ன ஆர்சிபி மாதிரியா.. ஃபைனல்ஸ் முடிஞ்ச பிறகு இருக்கு கச்சேரி - சபாஷ் அகமது

நாங்க என்ன ஆர்சிபி மாதிரியா.. ஃபைனல்ஸ் முடிஞ்ச பிறகு இருக்கு கச்சேரி – சபாஷ் அகமது

- Advertisement 1-

ராஜஸ்தானின் பேட்டிங் ஆரம்பித்தபோது அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போதிலும் அதனை ஹைதராபாத் பக்கம் மாற்றி எழுதியவர்களில் இரண்டு வீரர்கள் முக்கியமானவர்கள். அபிஷேக் ஷர்மா மற்றும் சபாஷ் அகமது ஆகியோர், முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்த ட்விஸ்ட்டை நிச்சயம் பேட் கம்மின்ஸ் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தான் தெரிகிறது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கும் தொடக்க ஜோடியில் அபிஷேக் ஷர்மா முதல் ஓவரிலேயே 12 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். பின்னர் உள்ளே வந்த ராகுல் திரிபாதி, மிகச் சிறப்பாக ஆடி 15 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இன்னொரு புறம் முதல் பந்திலிருந்து அதிரடி காட்டும் ஹெட், 28 பந்துகளில் 34 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். இதனால் ஹைதராபாத்தின் பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட, கிளாஸன் 50 ரன்கள் எடுத்து ஓரளவு மீட்டிருந்தார். கடைசி கட்டத்தில் சபாஷ் அகமது 18 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் அவர்கள் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக அடி ரன் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு சூழலில் தான் சபாஷ் அகமது மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையும் எதிர்பாராத நேரத்தில் பயன்படுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியிருந்தார் பேட் கம்மின்ஸ்.

- Advertisement 2-

ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஆகியோரின் விக்கெட்டை சபாஷ் அகமது எடுக்க, சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் ஆகியோரின் விக்கெட்டை அபிஷேக் சர்மா ஒரு பார்ட் டைம் பவுலராக உள்ளே வந்து தூக்கி இருந்ததும் போட்டி ஹைதராபாத் பக்கம் திரும்ப காரணமாக இருந்தது.

இதிலிருந்து மீள முடியாத ராஜஸ்தான் அணி, 139 ரன்கள் எடுத்து தோல்வியடைய சபாஷ் அகமது ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதற்கு பின் அவர் பேசுகையில், “கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பயிற்சியாளர் போட்டியின் சூழலுக்கு ஏற்ப என்னை பயன்படுத்துவதாக கூறி இருந்தனர். கடைசி கட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனாக இறங்க வேண்டும் என்பது தான் எனது ரோல்.

பேட்டிங்கில் தடுமாற்றம் உருவானால் நான் இறங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர். நான் பேட்டிங் செய்த சமயத்தில், ஆவேஷ் கான் மற்றும் சந்தீப் ஷர்மா பந்து வீச்சை பார்த்த போது பிட்ச்சில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தேன். இது போன்ற ஒரு போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருதை வெல்வது பெருமையாக உள்ளது.

நாங்கள் ஃபைனலில் வெற்றி பெற்ற பிறகு தான் அதனை கொண்டாடுவோம். இப்போது கொஞ்சம் நிம்மதியுடன் இருக்கவே நினைக்கிறோம்” என சபாஷ் அகமது கூறி உள்ளார்.

சற்று முன்