- Advertisement -
Homeவிளையாட்டுஅவர் தான் எல்லாத்துக்கும் காரணம்.. எங்களின் வெற்றி அவரால் தான் சாத்தியமானது.. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிடி..

அவர் தான் எல்லாத்துக்கும் காரணம்.. எங்களின் வெற்றி அவரால் தான் சாத்தியமானது.. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிடி..

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியை தொடர்ந்து மற்றொரு சாம்பியன் அணியான இலங்கை அணியையும் வீழ்த்தியுள்ளது ஆஃப்கானிஸ்தான்.

இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் மட்டும் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

வெற்றிக்கு பின் ஆஃப்கான் கேப்டன் ஹஸ்மதுலா ஷாகிடி பேசும் போது, நிறைவான வெற்றியை பெற்றிருக்கிறோம். ஆஃப்கானிஸ்தான் அணியை நினைத்து பெருமையாக உள்ளது. கிரிக்கெட்டின் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியுள்ளோம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவ்வளவு பெரிய இலக்கை விரட்டி வென்றது எங்களுக்கு ஊகத்தை கொடுத்துள்ளது.

இந்த பெருமையெல்லாம் எங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளை தான் சேரும். ஏனென்றால் 24 மணி நேரமும் எங்களுக்காக உழைத்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் தலைமை பயிற்சியாளர் ட்ராட் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் பேசுகிறார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் அவர் சொன்ன அந்த சொல், எனது எண்ணங்களை மாற்றிவிட்டது.

- Advertisement-

அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டனாக சிறப்பாக அணியை முன் நின்று வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகள் மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசை உள்ளது. உலகின் சிறந்த வீரர்களில் ரஷீத் கானும் ஒருவர். அவர் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் வீரர். மைதானத்தில் அவர் அளவிற்கு யாரையும் எனர்ஜியுடன் பார்க்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. அதன்பின் பலம் வாய்ந்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த 3 போட்டிகளில் இரண்டில் வென்றால் கூட ஆஃப்கானிஸ்தான அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்