- Advertisement -
Homeவிளையாட்டுஅடிச்சி சொல்றன்.. பும்ரா, ஸ்டார்க் எல்லாம் இல்ல, உ.கேல இவர் தான் பயங்கரமான பவுலரா இருக்கப்போறாரு.....

அடிச்சி சொல்றன்.. பும்ரா, ஸ்டார்க் எல்லாம் இல்ல, உ.கேல இவர் தான் பயங்கரமான பவுலரா இருக்கப்போறாரு.. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கருத்து

- Advertisement-

உலகம் முழுவதும் சிறந்து விளங்கும் டாப் 10 அணிகள் மோத உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிக பிரம்மாண்டமாக இந்தியாவில் துவங்க உள்ளது. இதில் பேட்ஸ்மேன் எப்படி ஆடப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்த பவுலர் இதில் மிகச்சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை சாய்க்க போகிறார் என்ற எதிர்பார்ப்பின் உள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டியானது அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று தொடங்க உள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நரேந்திர மோதி மைதானத்தில் தான் நடைப்பெற உள்ளது.

போட்டியில் பங்கேற்க உள்ள 10 அணிகளிலும் எக்கச்சக்கமான நட்சத்திர வீரர்கள் உள்ள காரணத்தால் ஆட்டங்கள் அனைத்தும் விறுவிறுப்பாக அமையும். போட்டி நடைபெற உள்ள இந்திய மைதானங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இருந்தாலும் உலகில் உள்ள தலைசிறந்த பவுலர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பந்து வீசுவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் முன்னால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பலரும் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் உலகக்கோப்பை யார் வெல்வார்கள் என பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் இந்த உலகக்கோப்பையில் எந்த பவுலர் மிக சிறப்பாக பந்து வீசுவார் என்ற ஒரு கருத்தை கூறியுள்ளார்.

- Advertisement-

இவர் கூறியுள்ள கருத்துக் கணிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க், இங்கிலாந்து அணியின் மார்க் வுட் அல்லது எந்த ஒரு சுழற் பந்து வீச்சாளரோ இடம்பெறவில்லை. இவர் தேர்வு செய்த வீரர் பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி. ஷாஹீன் அப்ரிடி இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 39 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் .

இது பற்றி அவர் கூறுகையில்: பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடும். பி.எஸ்.எல். தொடரை பாகிஸ்தானில் கண்டுகளிக்க சென்றபோது அவரின் பந்துவீச்சை பார்த்தேன் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசினார். அவரின் வளர்ச்சி மிகவும் அளப்பரியது என விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

சற்று முன்