- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த ஒன்னு போதுமே.. டி 20 கப்ப அலேக்கா தூக்கிடுவோம்.. கான்ஃபிடன்டாக சொல்லும் ஷகிப் அல்...

அந்த ஒன்னு போதுமே.. டி 20 கப்ப அலேக்கா தூக்கிடுவோம்.. கான்ஃபிடன்டாக சொல்லும் ஷகிப் அல் ஹசன்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 1 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் இதற்கான அட்டவணையுடன் ஐசிசி வெளியிட்டிருந்தது. மொத்தம் உள்ள 20 அணிகள் இதில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதிலிருந்து இரண்டு அணிகள் காலிறுதி சுற்றுக்கு தேர்வாகி அடுத்த சுற்று போட்டிகள் நடைபெறும். முன்பெல்லாம் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெறும் சமயத்தில் அதிக அளவிலான போட்டிகளை பெரிய அணிகளே வெல்லும். கத்துக்குட்டி அணிகளாக கருதப்படும் பல அணிகள் ஒரு போட்டியை உலகக்கோப்பை தொடரில் வென்றாலே அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படும்.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்து உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. அதிலும் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டது என்றே சொல்லலாம். இதனால் இனிவரும் உலக கோப்பை தொடர்களிலும் கத்துக்குட்டி என்ற வார்த்தைக்கே இடமில்லாத அளவுக்கு கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் கூட தங்கள் வெற்றியை உறுதி செய்வதற்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயமும் உருவாகியுள்ளது. டி20 உலக கோப்பைத் தொடருக்கு நான்கு மாதங்கள் உள்ள சூழலில், அனைத்து அணிகளுமே சிறப்பான திட்டம் போட்டு தயாராகும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், டி 20 உலககோப்பையை தாங்கள் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் எட்டாவது இடம்பிடித்து வெளியேறி இருந்த பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டி20 போட்டியில் வென்றிருந்தது. அதேபோல குறைந்த ஓவர் போட்டியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பங்களாதேஷ் அணி பற்றி கேப்டன் ஷகிப் அல் ஹசன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“பங்களாதேஷ் அணி தற்போது மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. நியூசிலாந்து மைதானத்திலும் நாங்கள் சிறப்பாக ஆடி உள்ளதால் எங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. உலகக்கோப்பை தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மைதானங்கள் எங்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது” என ஷகிப் தெரிவித்துள்ளார்.

கடந்த உலகக்கோப்பை தொடரில் ஆடி இருந்த ஷகிப் அல் ஹசன், அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு வந்த சூழலில் தற்போது தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். இதனால் டி20 உலக கோப்பை தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவாரா அல்லது வேறு யாராவது கேப்டனாக நியமிக்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்