- Advertisement -
Homeவிளையாட்டுஆட்ட நாயகன் விருது... எல்லாம் முடிஞ்சி போச்சு... உ.கோ-யில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்... காரணம்...

ஆட்ட நாயகன் விருது… எல்லாம் முடிஞ்சி போச்சு… உ.கோ-யில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்… காரணம் என்ன?

- Advertisement-

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி உடன் நிறைவுபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடியும் தருவாயில் இருக்கும் வேளையில் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. அதனை தொடர்ந்து நான்காவது இடத்திற்கான போட்டி நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நிலவி வருகிறது.

இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பு இருப்பதினால் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்து விட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்த வேளையில் கடைசியாக எஞ்சியுள்ள ஒரு போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய அவர்கள் உலககோப்பை தொடரினை அற்புதமாக ஆரம்பித்தனர்.

ஆனால் அதன் பின்னர் அந்த அணியின் நட்சித்திர வீரர்கள் சோபிக்க தவறியதால் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து மோசமான நிலையை சந்தித்தது. கடைசியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற வங்கதேச அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நவம்பர் 11-ஆம் தேதி தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட இருக்கிறது.

- Advertisement-

இவ்வேளையில் அரையிறுதிக்கான வாய்ப்பு முற்றிலுமாக பறிபோன நிலையில் அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கடைசி போட்டிக்கான அணியில் இருந்து விலகி உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி பெரிய அளவில் எந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படாமல் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த வேளையில் கடைசி போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் காயத்தை காரணம் காட்டி நைசாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் பேட்டிங்கில் 82 ரன்களையும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஷாகிப் அல் ஹஸன் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த வேளையில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்கு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்தவர்களால் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்