- Advertisement -
Homeவிளையாட்டுஎனக்கு வாய்ப்பில்லையா.. மீட்டிங்கில் மாறி மாறி வார்த்தைகளை விட்ட ஷமி, ரோஹித்.. பரபர தகவல்..

எனக்கு வாய்ப்பில்லையா.. மீட்டிங்கில் மாறி மாறி வார்த்தைகளை விட்ட ஷமி, ரோஹித்.. பரபர தகவல்..

- Advertisement-

இந்திய அணிக்காக எப்படி ஒரு அசத்தலான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்து வருகிறாரோ அவரைப் போலவே இன்னும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் தான் முகமது மி. சர்வதேச போட்டிகளில் காயம் ஏற்படாமல், ஐபிஎல் போட்டிகளில் பணத்தை நோக்கமாக வைத்து பல வீரர்கள் ஆடி வரும் சூழலில், காலில் காயத்தை வைத்துக் கொண்டு கடந்த உலக கோப்பையில் ஆடி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தவர் தான் முகமது மி.

முழங்கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த சில முக்கிய தொடர்களிலும் ஷமி இந்திய அணிக்காக ஆடவே இல்லை. இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் களமிறங்குவார் என்றும் அதற்கு முன்பு காயத்திலிருந்து ஷமி மீண்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய அகாடமியில் பயிற்சி முடித்துவிட்டு தற்போது சையது முஸ்தாக் அலி தொடர் ஆடிவரும் ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அடிலெய்டு மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, முகமது ஷமி தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்றும் அவரை உடனடியாக ஆஸ்திரேலிய மண்ணிற்கு கொண்டு வந்து நெருக்கடி கொடுத்து மீண்டும் பிரச்சனைக்குள் செல்லவில்லை என்றும் கூறியிருந்தார். ஷமி இந்திய அணிக்கா ஆடுவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருப்பதாவும் குறிப்பிட்டிருந்தார் ரோஹித்.

இதனிடையே, ஷமி மற்றும் ரோஹித் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பெங்களூரு டெஸ்ட்காடமியில் இருந்த ஷமியை ரோஹித் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் ஷமி இடம்பெறுவதாக விவாதிக்கப்பட்ட போது அவர்கள் இருவருக்கும் இடையே காரசாரமா விவாதம் உருவானதாக கூறப்படுகிறது.

- Advertisement-

இதில் ரோஹித் மற்றும் ஷமி என இருவரும் வார்த்தைகளை பரிமாறிக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனால் தான் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறார் என்றும் கூட பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால், சையது முஷ்டாக் அலி தொடர் மற்றும் ரஞ்சி தொடரில் ஷமி ஆடினாலும் தேசிய அகாடமியில் இருந்து அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அப்படி தேசிய அகாடமி அனுமதி கொடுத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 து மற்றும் 5 து முகமது ஷமி இடம்பெறுவார் என்றும் தெரிகிறது.

சற்று முன்