- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கிடைக்காத வாய்ப்பு.. டி 20 உலக கோப்பைக்காக அப்போதே பிளான்...

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கிடைக்காத வாய்ப்பு.. டி 20 உலக கோப்பைக்காக அப்போதே பிளான் போட்ட வெ. இ வீரர்..

- Advertisement 1-

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் 110 முதல் 120 ரன்கள் சிறந்த ஸ்கோராக இருக்கும் நிலையில் இதனை இலக்காக துரத்தி ஆடும் அணிகள் தோல்வியடையும் சூழல் தான் அதிகமாக உருவாகி இருந்தது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் உள்ள அனைத்து அணிகளுமே 130 முதல் 140 ரன்கள் அடிப்பதற்கே சிரமப்பட்டது. ஒரே ஒரு போட்டியில் தான் கனடா மற்றும் அமெரிக்கா என இரண்டு அணிகளும் 190 ரன்களை கடந்திருந்தது.

ஆனால் அதே வேளையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் மோதி இருந்த போட்டியில் 200 ரன்கள் வரையும் குவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான போட்டிகளில் ரன்கள் குறைவாக இருந்ததன் காரணமாக சில போட்டிகள் ரசிகர்களுக்கு அதிகம் போர் அடிப்பதாகவும் கருத்தினை தெரிவித்து வந்த நிலையில், இந்த சீசனின் மிகச்சிறந்த போட்டியாக அமைந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 30 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழக்க மேற்கொண்டு ரன் சேர்க்கவும் திணறியது. இதனால் 76 ரன்களில் ஏழு விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மெல்ல மெல்ல ரன் சேர்த்து 18 வது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் வரை அவர்கள் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களத்தில் இருந்த செர்பான் ரூதர்ஃபோர்டு அப்படியே போட்டியை மாற்றி இருந்தார். கடைசி 12 பந்துகளில் மொத்தம் 37 ரன்கள் சேர்க்கப்பட, வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்திருந்தது. கடைசிவரை களத்தில் இருந்த செர்பான் ரூதர்ஃபோர்டு, 39 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்ததுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை கடக்கவும் உதவி செய்திருந்தார்.

- Advertisement 2-

பின்னர் ஆடிய நியூசிலாந்தும் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, அவர்களால் 136 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 8 சுற்றையும் உறுதி செய்துள்ளனர். மறுபக்கம் நியூசிலாந்து அணிக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு மங்கி போனதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த போட்டியில் கலக்கிய செர்பான் ரூதர்ஃபோர்டு, ஐபிஎல் தொடரில் இடம்பிடித்தும் ஒரு போட்டி கூட ஆடாமல் இருந்து தற்போது தன்னை நிரூபித்து அசத்தி உள்ளார்.

இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த செர்பான் ரூதர்ஃபோர்டு, ஒரு முறை கூட ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அப்படி இருக்கையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிரடி வெற்றியை பெற்றுக் கொடுத்த செர்பான் ரூதர்ஃபோர்டு, போட்டிக்கு பின்னர் பேசி இருந்த போது தான் இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு அதற்காக பயிற்சி செய்து தயாராகி வந்ததாகவும் அதனை தற்போது ஆடி நிருபித்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சற்று முன்