- Advertisement 3-
Homeவிளையாட்டுகேட்சை விட்டா எப்படி மேட்ச் ஜெய்க்குறது.. அடுத்த மேட்ச்ல இதை தான் பண்ணி ஆகணும்.. வேதனையில்...

கேட்சை விட்டா எப்படி மேட்ச் ஜெய்க்குறது.. அடுத்த மேட்ச்ல இதை தான் பண்ணி ஆகணும்.. வேதனையில் தவான்..

- Advertisement 1-

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர், ஒரு ரோலர் கோஸ்ட் ரைடாகவே இருந்து வருகிறது. முதல் போட்டியில் டெல்லி அணியை அபாரமாக வீழ்த்தி இருந்த அவர்கள், இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த போதிலும் தவானின் பவுலிங் ரொட்டேஷன் தான் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தது.

மூன்றாவது போட்டியில் லக்னோ அணியை சந்தித்து இருந்த அவர்கள் முதலில் பந்து வீச, எதிரணி 199 ரன்களை எடுத்திருந்தது. ஃபீல்டிங்கில் செய்த சில தவறுகளின் காரணமாக அதிக ரன்களையும் பஞ்சாப் அணி கொடுத்தது.

இதனையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. விக்கெட்டுகளை இழக்காமல் நூறு ரன்களை அவர்கள் கடந்ததால் நிச்சயம் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் ரசிகர்கள் கருதினார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ வந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மாயங் யாதவ் அப்படியே போட்டியின் விதியை மாற்றி இருந்தார். பஞ்சாபின் முதல் மூன்று விக்கெட்டுகளான பேர்ஸ்டோ, ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோரை அவர் அவுட் எடுக்க, பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

- Advertisement 2-

இதற்கடுத்து இரண்டு விக்கெட்டுகளை மற்றொரு இளம் பந்து வீச்சாளர் மோஷின் கான் எடுக்க ஓவர்கள் முடிவில் பஞ்சாப் பணியால் 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லிவிங்ஸ்டன் களத்தில் இருந்த போதிலும் 18 ஆவது மற்றும் 19 வது ஓவரை லக்னோ பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி வெற்றியையும் உறுதி செய்தனர்.

முதல் போட்டியில் வெற்றிகரமாக தொடங்கி இருந்த பஞ்சாப் அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளின் தோல்வியால் துவண்டு போய் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த தோல்விக்கு பின்னர் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், “லக்னோ அணி சிறப்பாக ஆடினார்கள். லிவிங்ஸ்டன் காயம் அடைந்தது எங்களுக்கு சிக்கலாகி போனது. இல்லை என்றால் அவர் 4 வது வீரராக களமிறங்கி இருப்பார். நாங்கள் நன்றாக எங்களின் பேட்டிங்கை தொடங்கிய போதும் மயங்க் யாதவ் தனது வேகப்பந்தால் சிறப்பாக கையாண்டார்.

அவரது வேகத்தை பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்தேன். ஆனால் அவரது வேகத்தை அவருக்கு எதிராக ஆட நினைத்தும் அவர் பவுன்சர் மற்றும் யார்க்கர்களால் எங்களை கட்டுப்படுத்தினார். அவரது வேகத்தை ஷார்ட் திசையில் பவுண்டரி அடிக்குமாறு பேட்ஸ்மேன்களிடம் கூறியும் தனது உடலின் மூலம் பந்து வீசி பேர்ஸ்டோ விக்கெட்டையும் எடுத்தார்.

அவரை போலவே மோஷின் கானும் நன்றாக பந்து வீசினார். இந்த தோல்விக்கான காரணம் பற்றி ஆலோசித்து சரி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஃபீல்டிங்கில் கோட்டை விட்ட சில கேட்ச்கள் தான் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதில் தான் இன்னும் அதிக கவனம் செலுத்தி மேம்பட வேண்டும் என நினைக்கிறோம்” என ஷிகர் தவான் கூறி உள்ளார்.

சற்று முன்