- Advertisement -
Homeவிளையாட்டு5 வருசத்துல 100 செஞ்சுரி.. கோலி, ரோஹித் உடனான தருணம் பற்றி உருகிய தவான்..

5 வருசத்துல 100 செஞ்சுரி.. கோலி, ரோஹித் உடனான தருணம் பற்றி உருகிய தவான்..

- Advertisement-

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகுந்த ஒரு பொற்காலமாக தான் தொடக்க ஜோடி பேட்டிங் வரிசை அமைந்திருந்தது. இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலி என மூன்று முகங்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பிரதிபலித்து வந்தது.

ஒரு காலத்தில் சச்சின், சேவாக், கம்பீர், கங்குலி உள்ளிட்ட பலர் ஆடிய தொடக்க பேட்டிங் வரிசை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என அந்த சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி இருந்து வந்தது. ஆனால், அதனை நிவர்த்தி செய்ததுடன் ஒரு படி மேலே செய்து காட்டியிந்தது தவான் – ரோஹித் – கோலி என்ற மூவர் காம்போ.

டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என எந்த போட்டிகளாக இருந்தாலும் இவர்கள் மூவரும் காலடி எடுத்து வைத்தால் சரவெடி தான். இதில் ஒருவர் ரன் அடிக்க தவறினாலும், மற்ற இருவர் சேர்ந்து அணியை மீட்டெடுத்து விடுவார்கள். அவர்கள் இணைந்து பல அதிரடியான ஆட்டங்களை ஆடியதுடன் கடினமான இலக்கையும் கூட எளிதானதாக மாற்றி விடுவார்கள்.

இதில், கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் இன்னும் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.

- Advertisement-

அவரது இடத்தில கடந்த நான்கு ஆண்டுகளாக இளம் வீரர்களுக்கு துவக்க வீரர் என்ற வாய்ப்பு கிடைத்து வருவதால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியாமலே ஓய்வினை அறிவித்து விட்டார் தவான். ஒரு சமயத்தில் கில், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்களின் தாக்கம் அதிகமாக இருந்த போது தனது இடம் பறிபோனது குறித்து பேசியிருந்த தவான், இளம் வீரர்கள் ஆடிவருவது நல்ல விஷயம் என்றும் அவர்கள் இருக்கும் ஃபார்மிற்கு தனக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்காது என்றும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இதனிடையே, மீண்டும் இடம் பிடிக்காமல் ஓய்வினை ஷிகர் தவான் அறிவித்ததும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது ரசிகர்கள் உருக்கத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர். கோலி, ரோஹித் மற்றும் தவான் என மூவரும் இணைந்து ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த சமயத்தில் ஆடிய போட்டிகளில் நிறைய சாதனைகள் அரங்கேறி உள்ளது.

அது பற்றி ஓய்வுக்கு பின் பேசிய ஷிகர் தவான், “நாங்கள் மூவரும் அற்புதமான பயணத்தில் பங்கெடுத்துள்ளோம். விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் நான் என மூவரும் இணைந்து 5 ஆண்டுகளில் 100 சதங்கள் அடித்த நிகழ்வு இன்னும் எனக்கு ஞாபகம் உள்ளது. ரவி சாஸ்திரி தான் அப்போது எங்களின் பயிற்சியாளராக இருந்தார்” என தவான் கூறி உள்ளார்.

சற்று முன்