ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்றும் தர்மசாலாவில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மெய்ர் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். போட்டியின் போது ஹெட்மெய்ருக்கும் பஞ்சாப் ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கும் இடையே சிறு வாய்வார்த்தை மோதல் நடந்து போட்டியை காரசாரமாக்கியது.
17வது ஓவரின் கடைசி பந்தில், ஹெட்மெய்ட் சாம் கர்ரண் வீசிய ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் பந்து மிஸ் ஆகி கீப்பர் கேட்ச் பிடித்து அவுட்டுக்கு விண்ணப்பித்தார். அதற்கு நடுவர் விரலை உயர்த்தி அவுட் என அறிவித்தார். ஹெட்மெய்ர் உடனடியாக டிஆர்எஸ் கேட்டார். மூன்றாவது நடுவரின் ரிவ்யூவில் அல்ட்ரா எட்ஜ் மூலம் பந்து பேட்டில் படவில்லை என்றும் ஹெட்மெய்ர் அவுட் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டார்.
இதனால் சாம் கர்ரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமாக சாம் கர்ரன் மற்றும் ஹெட்மெய்ர் ஆகிய இருவரும் வாய்மொழி சண்டையில் ஈடுபட்டனர். இதனால் சில வினாடிகள் மைதானத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்கள் மேல் குவிந்தது.
பின்னர் 19 ஆவது ஓவரை சாம் கர்ரண் வீச வந்த போது முதல் பந்தில் ஹெட்மெய்ர் பவுண்டரி விளாசினார். அப்போது சாம் கர்ரணை வெறுப்பேத்தும் விதமாக அவர் சாம் கர்ரணுக்கு சுற்றி ஓடினார். இதுவும் மைதானத்தில் ரசிகர்களின் கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்த்தது.
இதையும் படிக்கலாமே: ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்வாரா தோனி? யாரை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது
பின்னர் அதே ஓவரில் சாம் கர்ரண் ஹெட்மெய்ரின் விக்கெட்டை சாய்த்தார். இப்படி அந்த ஓவர் முழுவதும் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு போல இருவரின் கையும் மாறி மாறி ஓங்கி இருந்தது. இப்படி நேற்றைய போட்டியில் சாம் கர்ரணும் ஷிம்ரான் ஹெட்மெய்ரும் போட்டியை விறுவிறுப்பாக்கினர்.