சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் சிவம் துபே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே வின் ஆல் டைம் பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலே அதிக முறை பைனலுக்கு சென்ற அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பல சாதனைகளை சிஎஸ்கே படைத்திருக்கிறது.
இந்த நிலையில் சிவம் துபே தேர்வு செய்துள்ள ஆல் டைம் 11 அணியில் தொடக்க வீரர்களாக மேத்யூ ஹைடன் மற்றும் மைக்கேல் ஹஷியை சிவம் துபே தேர்வு செய்துள்ளார். மூன்றாவது வீரராக சின்ன தல சுரேஷ் ரெய்னாவையும் நான்காவது வீரராக ராயுடுவையும் தேர்வு செய்துள்ள சிவம் துபே ஐந்தாவது வீரராக தோனியை தேர்வு செய்து கேப்டனாக அறிவித்திருக்கிறார்.
ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவையும் ஏழாவது வீரராக வேக பந்துவீச்சாளர் ஆல்பி மார்க்கேலையும் எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் பிராவோவையும் ஒன்பதாவது வீரராக ஹர்பஜன் சிங்கையும் பத்தாவது வீரராக பாலாஜியையும் 11-வது வீரராக தன்னையும் அவர் சேர்த்துக் கொண்டுள்ளார்.
சிவம் துபவின் இந்த அணியை பலரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள். தன்னுடைய பெயரையே அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தனர். சிவம் துபே தேர்வு செய்த அணியை தீபக்சாகர் கிண்டல் அடித்துள்ளார்
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடன் ஒரு ஓவர் போட்டிக்கு வா அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அந்த பிளேயிங் லெவனின் இடம் பெறட்டும் என அவர் பந்தயத்திற்கு அழைத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த சிவம் துபே போட்டிக்கு நான் தயார் என்றும் ஆனால் எனக்கு பிளேயிங் லெவனின் முக்கியம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு தீபக்சாகர் அதில் வெற்றி பெற்றால் மட்டும் தான் உனக்கு அணியில் இடம் கிடைக்கும் என்றும் மீண்டும் கூறியுள்ளார். சிஎஸ்கே வீரர்களின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது