- Advertisement -
Homeவிளையாட்டுதோனி சொன்ன அந்த ஒரு வார்த்தை. ஐபிஎல் பைனலில் இதை என்னால் மறக்கவே முடியாது -...

தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தை. ஐபிஎல் பைனலில் இதை என்னால் மறக்கவே முடியாது – சிஎஸ்கே வீரர் சிவம் துபே பேச்சு

- Advertisement-

சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்த ஒரு வீரராக உள்ளார் சிவம் துபே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் சிஎஸ்கே அனுபவங்கள் பற்றி பேசியுளார்.

அவரது பேச்சில் “ நான் எப்போதும் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை. நான் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சாளர் மீது கவனம் செலுத்தவும், எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவும் தான் விரும்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் அழுத்தத்தை உணரக்கூடும். எனவே, நிகழ்காலத்தில் வாழ்ந்து ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்துவதே சிறந்தது.

CSK-வில், நாங்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காகவே பாடுபட்டோம். நான் நன்றாக விளையாடி, அணி தோற்றால், அது எனக்கு மகிழ்ச்சியைத் தராது. நாங்கள் அனைவரும் அணி வெற்றி பெற்று அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று தான் விரும்பினோமே தவிர, தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தேடவில்லை.

உண்மையை கூறவேண்டுமானால், நடந்து முடிவடைந்த ஐபிஎல் சீசனில் எனது பேட்டிங்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இதில் சிறந்த பகுதி என்னவென்றால், கேப்டன் தோனி, அணி வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த CSK-வின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. இந்த சீசனில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என அனைவரும் விரும்பினர். சில போட்டிகளை என்னால் சொந்தமாக வெல்ல முடியும் என்று மஹி பாய் சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அது என் நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது.

- Advertisement-

எல்லா வீரரை போலவே, இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்பது தான் என் லட்சியம். அந்த இலட்சியத்தை அடைய என்னை நான் நிச்சயம் மேம்படுத்திக்கொண்டு, விளையாட்டின் ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து முன்னேறுவேன்.” என பேசியுள்ளார்.

மேலும் அவர் “எனது பயணத்தின் மிகவும் உற்சாகமான கட்டங்கள் எதுவென்று கேட்டால், இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் (அவர் இதுவரை ஒரு ODI மற்றும் 13 T20I ஐ விளையாடியுள்ளார்) ஐபிஎல்லில் வெற்றி பெற்ற CSK இன் உறுப்பினராக இருந்ததும் தான்.

இறுதிப் போட்டியில் நான் நான்-ஸ்ட்ரைக்கர் பக்கத்தில் இருந்தபோது, ஜட்டு பாய் (ரவீந்திர ஜடேஜா) அந்த வின்னிங் ஷாட்டை அடித்தது நிச்சயம் மறக்க முடியாத ஒன்று. நாங்கள் எப்போதும் எங்களை நம்பினோம். ஆனால் அதற்காக ஓவர் காண்பிடண்ட்டோடு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்