- Advertisement 3-
Homeவிளையாட்டு100 முதல் 150 பவுன்சர்கள்... 3 முதல் 4 மாத பயிற்சி... அதிரடி ஆட்டத்திற்கு பின்...

100 முதல் 150 பவுன்சர்கள்… 3 முதல் 4 மாத பயிற்சி… அதிரடி ஆட்டத்திற்கு பின் இருந்த ரகசியம் இது தான்… சிவம் துபே பேச்சு

- Advertisement-

ஐபிஎல் 2023-ல் சிஎஸ்கே அணி மகத்தான வெற்றியை பெற்று கோப்பையை வென்றது. இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை சிஎஸ்கே-வில் நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்றே கூற வேண்டும். அந்த வரிசையில் சிவம் துபேவின் பெயரை நாம் அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாது. அணிக்கு தேவைப்படும் நேரத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல நேரங்களில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

ஐபிஎல் பைனல் போட்டியின் போது கூட அவர் அதிரடியாகவே ஆடினார். அந்தப் போட்டியில் அவர் 21 பந்துகளில் 32 ரன்கள் விலாசினார். அதில் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். 2023 ஐபிஎல் ஐ பொறுத்தவரை அவர் 14 போட்டிகளில் விளையாடி 418 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 158.33-ஆக இருந்தது.

- Advertisements -

இவர் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என்றே கூற வேண்டும். எதிரணியில் எப்போதெல்லாம் ஸ்பின்னர்கள் பவுலிங் செய்கிறார்களோ அந்த சமயத்தில் எல்லாம் தோனி சிவம் துபேவை பலமுறை களத்தில் இறக்கினார். அது அவருக்கு கை மேல் பலன் அளித்தது. அஸ்வின், ரஷித் கான், சாகல் இப்படி முதல் தர பௌலர்களின் பந்துகளையும் இவர் பதம் பார்த்தார் என்றே கூற வேண்டும். ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டம் காரணமாக இவர் ஆசிய போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் ஒரு அங்கமாக மாறி உள்ளார்.

இந்த நிலையில் ஜியோ சினிமாவில் நடைபெற்ற ஆகாசவாணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவம் துபேவிடம் ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை முன்வைத்தார். அதில், நீங்கள் ஐபிஎல் போட்டிக்காக எப்படி ப்ராக்டிஸ் செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு பதில் அளித்த சிவம் துபே,

- Advertisement-

கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு நான் என்னுடைய ட்ரெய்னிங்கை தொடங்கினேன். போட்டி இல்லாத சமயங்களில் எல்லாம் இயந்திரங்களை பயன்படுத்தி சாட் பால் போட வைத்து அதை நான் அடித்து பிராக்டிஸ் செய்தேன்.

கடந்த முறை ஐபிஎல் போட்டியில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனினும் காயத்திலிருந்து விரைவாக மீண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை 100 முதல் 150 பவுன்சர்களை போட வைத்து அதை நான் அடித்து விளையாடினேன். இது எனக்கு நல்ல ஒரு பயிற்சியாக இருந்தது. அதேசமயம் ஐபிஎல்-ல் நன்கு விளையாடவும் அது உதவியது என்று கூறியுள்ளார் சிவம் துபே.

சற்று முன்