- Advertisement -

இந்த ஒரு தப்ப மட்டும் சரி செஞ்சா.. இந்திய கப் ஜெயிக்குறத தடுக்க முடியாது.. அக்தர் சுட்டிக்காட்டிய பிழை..

பந்து வீச்சு, பேட்டிங் தொடங்கி ஃபீல்டிங் வரை இந்திய அணி அனைத்து ஏரியாவிலும் கில்லியாக திகழ்ந்ததால் அவர்கள் தற்போது டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கும் 3 வது முறையாக முன்னேற்றம் கண்டுள்ளனர். தோனி தலைமையில் முதல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியால் அவரது தலைமையில் 2014 ஆம் ஆண்டு அதனை இறுதி போட்டியில் தொட்டு பார்க்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ள சூழலில், தோனிக்கு பிறகு நிச்சயம் ரோஹித் தலைமையில் சாதனை புரிவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்திலும் கலக்கி வந்தாலும் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, இதுவரை 7 போட்டிகள் விளையாடி 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பல முறை அவரது பேட்டிங்கால் வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு இந்த முறை அப்படி ஒரு பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை.

இது பற்றி பலவித விமர்சனங்கள் உருவாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசி இருந்த கேப்டன் ரோஹித், அனைத்தையும் சேர்த்து இறுதி போட்டியில் கோலி ரன் குவிப்பார் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார். இதே போல, ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே என இருவரும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வர, அந்த இடங்களில் நிச்சயம் பிரச்சனைகளை இறுதி போட்டிக்கு முன்பாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்திலும் இந்திய அணியினர் உள்ளனர்.

- Advertisement -

இதனிடையே, இந்திய அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “இந்திய அணி இந்த முறை டி20 உலக கோப்பையை வெல்வதற்கு எனது வாழ்த்துக்கள். அதற்கு அவர்கள் தகுதி உடையவர்கள். நான் நீண்ட காலமாக இதனைத் தான் சொல்லி வருகிறேன். கடைசி இரண்டு உலக கோப்பைகளையும் அவர்கள் தான் வென்றிருக்க வேண்டும்.

ஆனால் டி20 உலக கோப்பையை நிச்சயம் இந்திய அணி கைப்பற்றும். இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்றால் பேட்டிங்கை எடுக்கலாம். அவர்களின் முதல் ஃபைனல் என்பதால் இந்தியாவின் ஆட்டத்தை பார்த்து நிச்சயம் கொஞ்சம் பயந்திருப்பார்கள். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து யாரால் ரன் அடிக்க முடியும்.

இந்தியா தான் நிச்சயம் இதனை வெல்லப் போகிறது. ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் ஷர்மா தொடக்க வீரர்களாக இறங்கி விட்டு 3 வது வீரராக கோலி வரலாம் என நான் நினைக்கிறேன். அப்படி நடந்தால் இந்திய அணியின் பிரச்சனையும் சரியாகி விடும். இது கோலியுடைய ஆட்டமே.கிடையாது. அவர் நேரம் எடுத்து லூஸ் பந்துகளை ஆடி அவரது ஸ்ட்ரைக் ரேட்டை மெல்ல ஏற்றக் கூடியவர். இதனால் பந்த் தொடக்க வீரராக வந்தால் நிச்சயம் பிரச்சனைக்கு தீர்வு வரும்” என சோயப் அக்தர் கூறியுள்ளார்.

- Advertisement -

Recent Posts