இந்திய அணி இலங்கையிடம் தோற்க நினைத்ததா? பாக்கிஸ்தான் தான் காரணமா? சோயப் அக்தர் பரபரப்பு பேச்சு

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

வெறும் 213 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது விமர்சனங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்பதற்காக மோசமாக ஆடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் சோயப் அக்தர் கூறுகையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஃபிக்ஸிங் என்று எனக்கு மெசேஜ்கள் குவிந்தன.

- Advertisement -

வேண்டுமென்றே இந்திய அணி இலங்கையிடம் தோற்பதற்காக ஆடுவதாக சொல்கிறார்கள். அப்போது தான் பாகிஸ்தான் வெளியேறும் என்றெல்லாம் கதை கூறுகிறார்கள். ஆனால் இந்திய அணி எதற்காக தோற்க வேண்டும். இலங்கை அணியை வென்றால், இந்தியா நேரடியாக ஆசியக் கோப்பை இறுதிக்கு சென்றுவிடலாம்.

என்னை பொறுத்தவரை இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. தரமாக பந்துவீசியதோடு, சிறப்பாக போராடினார்கள். இளம் வீரர் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கிலும் 46 ரன்கள் சேர்த்திருக்கிறார். இலங்கை அணியினர் வெற்றிக்காக போராடுகிறார்கள். அந்த போராட்டம் தான் பாகிஸ்தானிடம் மிஸ் ஆகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை குறை கூற விரும்பவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவர்கள் வீசினால், நிச்சயம் காயமடைவார்கள். அதேபோல் நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷாகின் அப்ரிடி என்று அனைவரும் தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதில்லை.

என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி வெற்றிக்காக போராட மறுப்பது தான் சோகமாக இருக்கிறது. 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 275 ரன்களாவது சேர்க்க முயற்சிக்க வேண்டும். அதனை கூற பாகிஸ்தானால் செய்ய முடியாதது தான் தோல்விக்கு காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்