இதை என்னால ஏத்துக்கவே முடியல.. அவர் இதை கண்டிப்பா செஞ்சிருக்கவே கூடாது.. பாக்கிஸ்தான் வீரர் மீது சோயிப் அக்தர் கடும் விமர்சனம்…

- Advertisement -

இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் லீக் போட்டியில் மோதியிருந்த வேளையில் தற்போது சூப்பர் போஃர் சுற்றிலும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இன்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது பாபர் அசாம் பவுலர்களை சரியாக மாற்றி பயன்படுத்தவில்லை என சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாம் பவுலர்களை பயன்படுத்திய விதம் தேவையில்லாத அர்த்தமற்ற ஒன்று அவர் சரியான முறையில் அவர்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த கருத்தினை அப்படியே ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் : பாபர் அசாம் முன்னிலை வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை. அவர் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். அதோடு சோயிப் அக்தர் கூறுகையில் : பாபர் அசாம் நிறைய ஓவர்களை ஸ்பின்னர்களுக்கு வழங்கி விட்டார். அந்த நேரத்தில் அவர் ஒருபுறம் வேகப்பந்து வீச்சாளர்களையும், ஒருபுறம் சுழற்பந்து வீச்சாளரையும் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இந்திய வீரர்கள் அவர்களை எளிதாக சமாளித்து விட்டனர். போட்டியின் ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா என முன்னணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்த ஷாஹீன் அப்ரிடி இந்திய அணியை தடுமாற்றம் காண வைத்தார்.

- Advertisement -

அதே வேகத்தில் தொடர்ச்சியாக ஒருபுறம் அவரை பந்துவீச வைத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் ஸ்பின்னர்கள் வந்ததால் இஷான் கிஷன் மற்றும் பாண்டியா ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டனர். இதுவே ஸ்பின்னர்கள் இல்லாமல் அப்ரிடி இருந்த பார்மில் அவரை தொடர்ச்சியாக பந்துவீச வைத்திருந்தால் முன்கூட்டியே போட்டியை முடித்திருக்கலாம்.

அதுமட்டும் இன்றி இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாபர் அசாம் செய்த கேப்டன்சி போன்று இந்த போட்டியிலும் இருந்திருக்க வேண்டும். அதாவது முன்கூட்டியே வேகப்பந்து வீச்சாளர்களை முழுவதுமாக பயன்படுத்தி இந்திய அணியை ஆல் அவுட் செய்திருக்க வேண்டும். அதை தவிர்த்து ஸ்பின்னர்களை இடையில் வீசவைத்து கடைசியில் வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் தக்க வைத்து 50 ஓவர்களையும் முழுமையாக பேட்டிங் செய்ய விட்டிருக்க கூடாது என சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்