- Advertisement -
Homeவிளையாட்டுஷாட் பால எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்.. அவங்க என்ன நம்பறாங்க, அது போதும் -...

ஷாட் பால எப்படி ஆடணும்னு எனக்கு தெரியும்.. அவங்க என்ன நம்பறாங்க, அது போதும் – ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி பேச்சு

- Advertisement-

வேக பந்துவீச்சாளர்களின் ஷாட் டெலிவரிக்களை ஸ்ரேயாஸ் அய்யர் எவ்வித பிரச்சினையும் இன்றி எதிர்கொள்கிறார். ஷாட் பால் வீசினால், ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை எளிதில் எடுத்துவிடலாம் என்ற கூற்றை அவர் தற்போது பொய்யாக்கி இருக்கிறார்.

ஷாட் பால் சர்ச்சை குறித்து பேசிய ஸ்ரேயாஸ் அய்யர், “எனக்கு பிரச்சினை இருப்பதாக சொல்கின்றீர்களே, அதற்கு என்ன அர்த்தம்? எத்தனை புல் ஷாட்களில் ரன் குவித்து இருக்கிறேன் என்று பார்த்தீர்களா? அதில் சில பவுண்டரிகளும் அடங்கும்.”

- Advertisement -

“ஒரு பந்தை அடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், அது ஷாட் பால் என்றாலும் சரி அல்லது ஓவர்பிட்ச் செய்யப்பட்ட பந்தாக இருந்தாலும் சரி விக்கெட்டை இழப்பதற்கான சூழல் நிச்சயம் இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை நான் பவுல்டு அவுட் ஆனால், எனக்கு இன்-ஸ்விங் பந்தை எதிர்கொள்ள தெரியாது என்று நீங்கள் சொல்வீர்கள்.”

“ஸ்ரேயாஸ் ஷாட் பால்-ஐ எதிர்கொண்டு விளையாட மாட்டார் என்ற உணர்வை வெளியில் நீங்கள் உருவாக்கி இருக்கின்றீர்கள். இதனை தற்போது எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். அது மட்டும் தான் உங்களது மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. மற்ற பிட்ச்களை விட அதிக பவுன்ஸ் ஆகும் மும்பை வான்கடேவில் இருந்து வருகிறேன்.”

- Advertisement-

“எனது பெரும்பாலான போட்டிகளை நான் இங்குதான் விளையாடி இருக்கிறேன். அதனை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஷாட்களை அடிக்கும் போது, சமயங்களில் அது ரன்களாகவும், சில முறை விக்கெட்டுகளாகவும் மாறிவிடும். ஆனால் என் விஷயத்தில், நான் பலமுறை அவுட் ஆகி இருக்கிறேன், இதனால் தான் நீங்கள் எனக்கு பிரச்சினை இருப்பதாக நினைக்கின்றீர்கள். ஆனால் என்னை பொருத்தவரை அதில் எந்த பிரச்சினையும் இல்லை.”

“என்மீதும், எனது விளையாட்டின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. சில பந்துகளை விளையாடுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் தொடர்ச்சியாக அவுட் ஆகலாம், ஆனால் அதை நான் கண்டுக் கொள்ள மாட்டேன். எனது அணி வீரர்கள் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர், அதுமட்டும் தான் முக்கியமான விஷயம், அதுதான் என்னை ஊக்கப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

சற்று முன்