- Advertisement -
Homeவிளையாட்டுதோனி, ரோஹித்திற்கே சவால் விட்ட ஷ்ரேயஸ்.. டெல்லி, கொல்கத்தா கேப்டனாக செஞ்ச தரமான சம்பவம்..

தோனி, ரோஹித்திற்கே சவால் விட்ட ஷ்ரேயஸ்.. டெல்லி, கொல்கத்தா கேப்டனாக செஞ்ச தரமான சம்பவம்..

- Advertisement-

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே பேட்ஸ்மேன்கள் பெயர் எந்த அளவுக்கு சிறப்பாக திகழ்கிறதோ அந்த அளவுக்கு பல கேப்டன்களின் பெயர்களும் நிலைத்து நின்று வருகிறது. தோனி, ரோஹித் ஷர்மா, கோலி என பல கேப்டன்களின் பெயர்களை சொல்லி கொண்டே போனாலும் இந்த சீசனில் நடந்த சில மாற்றங்களையும் மறுக்க முடியாது.

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தவர்தான் தோனி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பர் 1 அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அவருக்கு பதிலாக ருத்துராஜ் சிஸ்கேவின் கேப்டனாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை மாற்றி விட்டு ஹர்திக் கேப்டனான நிலையில் ரோஹித் ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். மேலும் நடப்பு சீசனில் சில முக்கியமான ஐபிஎல் கேப்டன்கள் மாற்றப்பட்டு அவர்களுக்காக இளம் வீரர்களும் அணியை திறம்பட வழிநடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயஸ் ஐயர், கடந்த சீசனில் காயம் காரணமாக ஆடாமல் போக அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அணியை வழி நடத்தி இருந்தார். அந்த அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் பலர் இருந்தும் அவர்கள் சிறப்பாக ஆடாததால் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தனர்.

- Advertisement-

தொடர்ந்து இந்த சீசனில் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் கேப்டனாகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். அப்படி இருக்கையில் பட்டாசாய் இந்த சீசனில் வெடித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. சென்ற சீசனில் ஃபார்மை இழந்த வீரர்கள் அனைவரும் இந்த முறை கச்சிதமான கம்பேக் கொடுத்துள்ள நிலையில் கோப்பையை கைப்பற்றி விடுவார்கள் என்றும் கருதப்படுகிறது.

கௌதம் கம்பீர் ஆலோசராக திரும்பி வந்துள்ளதும் கொல்கத்தா அணிக்கு பெரிய சாதகமாக இருக்கும் நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன்சியையும் அத்தனை எளிதில் கடந்து விட முடியாது. தோற்கும் போட்டிகளில் தவறை தன் பக்கம் எடுத்துக்கொண்டு இளம் வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுவதில் ஷ்ரேயஸ் ஐயரின் பங்கும் மிகப் பெரிது.

இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா, தோனி என ஐபிஎல் தொடரில் பெரிய கேப்டனாக பார்க்கப்படுவர்களுக்கு நிகராக மிக அசத்தலான சம்பவத்தை செய்து முடித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். டெல்லி அணி இதுவரை ஒரே ஒருமுறைதான் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயஸ் ஐயர்.

இதேபோல தற்போது கொல்கத்தா அணி, கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குவாலிஃபயர் 1 போட்டியையும் ஆட உள்ளனர். அப்போதும் ஷ்ரேயஸ் ஐயர் தான் கேப்டனாக இருந்து வருகிறார். இப்படி இரண்டு அணிகளின் தலைவிதியையே தனது தலைமையில் மாற்றி எழுதிய ஷ்ரேயஸ் ஐயரை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

சற்று முன்