- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக் இருந்தா தான் ஜெயிக்க முடியுமா.. மூணுல 2 மேட்ச் தட்டித் தூக்கியாச்சு.. குஜராத்தின் ரகசியம்...

ஹர்திக் இருந்தா தான் ஜெயிக்க முடியுமா.. மூணுல 2 மேட்ச் தட்டித் தூக்கியாச்சு.. குஜராத்தின் ரகசியம் உடைத்த கேப்டன் கில்..

- Advertisement 1-

கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்த அணி என்ற பெருமை பெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த முறை ரன் சேர்க்க முடியாமல் குஜராத் அணிக்கு எதிராக பெட்டி பாம்பாக அடங்கிப்போனது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி ஆடிய ஹைதராபாத் அணியில் ஹெட் 19 ரன்களிலும், மயங்க் அகர்வால் 14 ரன்களிலும் அவுட்டாக பின்னர் வந்த அபிஷேக் ஷர்மா 29 ரன்கள் எடுத்தும் அவுட்டாகி இருந்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் சிறு சிறு பங்களிப்பை மட்டுமே கொடுத்ததால் குஜராத் அணியின் பந்து வீச்சை தாண்டி அவர்களால் பெரிய ரன்னை குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.

குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் பேட்டிங் வந்த அனைவருமே சிறந்த பங்களிப்பை அளிக்க, அந்த அணி 5 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்ததுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தது.

அதிகபட்சமாக அந்த அணி வீரர் சாய் சுதர்சன் 45 ரன்களும், டேவிட் மில்லர் 44 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மொத்தம் மூன்று போட்டிகளில் ஆடி உள்ள குஜராத் அணி இரண்டில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள ஹைதராபாத், ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசி இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில், “சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது அற்புதமாக உள்ளது. இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக மேம்பட்டு வருகிறோம். மிடில் ஓவர்களில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களான நூர் மற்றும் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அதே போல, இது போன்ற பிட்ச்களில் மோஹித் ஷர்மாவின் அனுபவமும், இது போன்ற வெயிலில் அடுத்தடுத்து நான்கு ஓவர்கள் வரை வீசியதும் அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது.

யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்துகளை வீச கடுமையாக பயிற்சி செய்து அதை போட்டியிலும் செயல்படுத்தியதால் வெற்றியின் பங்கும் அவருக்கே செல்லும். மேலும் 160 – 170 ரன்களில் ஹைதராபாத்தை கட்டுப்படுத்த நினைத்து அதை பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செய்து முடித்தனர். குஜராத் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைவரும் தங்களின் ரோலை அறிந்து செயல்படுகின்றனர். சாய் மற்றும் சஹா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செயகின்றனர்.

இதில் சஹா நல்லதொரு பேட்டிங்கை ஆடுவதால் அதனை வைத்து மிடில் ஆர்டரில் டேவிட் மில்லரும் ஃபார்முக்கு திரும்பி விட்டார்” என சுப்மன் கில் கூறியுள்ளார்.

சற்று முன்