- Advertisement 3-
Homeவிளையாட்டு15 ரன் கம்மியா அடிச்சுட்டோம்.. மோஹித் ஷர்மா தான் எங்க ஹீரோ.. கில் வெளிப்படை..

15 ரன் கம்மியா அடிச்சுட்டோம்.. மோஹித் ஷர்மா தான் எங்க ஹீரோ.. கில் வெளிப்படை..

- Advertisement 1-

ஏறக்குறைய புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்த குஜராத் அணி, நான்காவது இடத்திலிருந்த சிஎஸ்கே அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன் எட்டாவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த வெற்றியின் காரணமாக குஜராத் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பும் இன்னும் உயிருடன் இருக்கும் அதே வேளையில் அவர்களின் தொடக்க பேட்டிங் பற்றி தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே பேசி வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த மற்றும் முஸ்தாஃபீசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா ஆகியோர் சொந்த நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகப்பெரிய பலவீனமாகவும் மாறிவிட்டது. அவை கடந்த சில போட்டிகளிலேயே தெளிவாக அறியப்பட்டிருந்த நிலையில் குஜராத்திற்கு எதிரான போட்டியில் இன்னும் அம்பலமானது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, கில் மற்றும் சுதர்சன் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்திருந்தது. இப்படி பந்து வீச்சில் கொஞ்சம் கூட மீள முடியாமல் தவித்த சிஎஸ்கே அணி, பேட்டிங்கில் இன்னும் கடுமையான தடுமாற்றத்தை கண்டிருந்தது. பத்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை குஜராத் அணி வீரர்கள் வீழ்த்த மொயீன் அலி மற்றும் மிட்செல் ஆகியோர் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருந்தனர்.

ஆனால் அந்த நம்பிக்கையும் கைகூடாமல் போக 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தனது சதத்திற்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்த குஜராத் கேப்டன் கில் பேசுகையில், “ஒரு சிறிய காயம் இருந்ததன் காரணமாகத்தான் நான் பெரிதாக ஃபீல்டிங் நிற்கவில்லை. உங்களை சுற்றி ஒரு லட்சம் ரசிகர்கள் ஆதரவுடன் இருக்கும்போது வெற்றி பெறுவது எளிதாக இருக்கிறது. சுதர்சனுடன் அப்படி ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்ததும் மிக அருமையாக இருந்தது.

- Advertisement 2-

நாங்கள் எந்த இலக்கையும் மனதில் வைத்து ஆடவில்லை. அனைத்து ஓவரிலும் அதிக ரன் அடித்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருந்தோம். நாங்கள் இருவரும் நன்றாக புரிந்து கொண்டு ஓடியும் ரன் சேர்த்து இருந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மோஹித் சர்மா எங்களுக்காக செய்து வரும் விஷயங்கள் மிக அபாரமாக உள்ளது.

250 ரன்கள் எடுக்கும் நிலையில் தான் நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம். கடைசி இரண்டு, மூன்று ஓவர்கள் மிகச் சிறப்பாக அவர்கள் பந்து வீசி இருந்தனர். 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நான் போட்டியின் அடிப்படையில் இதை கூறவில்லை. நெட் ரன் ரேட் அடிப்படையில் கூறுகிறேன்” என கில் தெரிவித்தார்.

சற்று முன்