- Advertisement 3-
Homeவிளையாட்டுபேட்டிங் ஆரம்பிச்சதும் விஷயம் தெரிஞ்சுடுச்சு.. இந்தியா ஈஸியா ஜெயிக்க காரணமா இருந்த ட்ரிக்.. கில் வெளிப்படை..

பேட்டிங் ஆரம்பிச்சதும் விஷயம் தெரிஞ்சுடுச்சு.. இந்தியா ஈஸியா ஜெயிக்க காரணமா இருந்த ட்ரிக்.. கில் வெளிப்படை..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தவர் தான் இளம் வீரர் சுப்மன் கில். அவர்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படாமல் போக, முதல் முறையாக பிளே ஆப் முன்னேறாமல் குஜராத் அணி வெளியேறி இருந்தது. இந்திய அணியின் வருங்கால கேப்டன் என கருதப்பட்டு வந்த கில்லின் தலைமை எடுபடாமல் போக தனது திறனை நிரூபிக்க அசத்தலான ஒரு வாய்ப்பும் கிடைத்திருந்தது.

இந்திய அணியில் பல சீனியர் வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாமல் போயினர். இதனால், இளம் வீரர்களில் சற்று சர்வதேச அனுபவம் இருக்கும் சுப்மன் கில்லிற்கும் இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பும் எகிற முதல் போட்டியில் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

- Advertisements -

115 ரன்களைக் கூட தொட முடியாமல் இந்திய அணி தோல்வி அடைய, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை இழந்து விடுவார்களோ என்ற பதற்றம் உருவானது. ஆனால், 2 வது போட்டியில் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை உண்டு இல்லை என பண்ணிய இந்திய அணி பேட்ஸ்மேன்களால் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த 3 வது டி20 போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளதால் தொடரை சொந்தமாக்குவதும் சற்று எளிதாக மாறி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், ருத்துராஜ் 49 ரன்களும் எடுத்திருந்தனர்.

- Advertisement-

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, 39 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்தனர் டியான் மயர்ஸ் மற்றும் கிளைட் ஆகியோர். இருந்தாலும் 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, கேப்டன் கில்லும் உற்சாகத்துடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு போட்டி. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நாங்கள் கொடுத்த தொடக்கம் அற்புதமாக இருந்தது. புதிய பந்தில் பிட்ச் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் அந்த சூழலை அறிந்து கொண்டோம். மேலும் பந்து பழையதாகும் போது ரன் சேர்க்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டோம். அனைவரும் நல்ல பங்களிப்பை அளித்தது நல்ல ஒரு சமிக்ஞையாக தெரிகிறது” என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்