- Advertisement 3-
Homeவிளையாட்டுகடைசி 3 ஓவர்ல நாங்க போட்ட பிளான்.. ராஜஸ்தானை காலி செய்ய குஜராத் கையில் எடுத்த...

கடைசி 3 ஓவர்ல நாங்க போட்ட பிளான்.. ராஜஸ்தானை காலி செய்ய குஜராத் கையில் எடுத்த ஆயுதம்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் முதல் சில போட்டிகளின் அடிப்படையில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை தீர்மானிக்க முடியாது. ஒரு அணி அனைத்து போட்டிகளிலும் வென்று பலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென லீக் சுற்றின் கடைசி போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழப்பார்கள்.

இது ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்கு நடைபெற்றுள்ள நிலையில் இந்த முறை தடுமாற்றத்தை கண்டு வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி நிச்சயம் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று முன்பு போல முன்னேற்றம் காணும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்ததால் குஜராத் அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது.

மிக நெருக்கடியான ஒரு சூழல் நிறைந்திருந்தாலும் அதனை சிறப்பாக அவர் கையாண்டு வந்தாலும் அணியில் சில தவறுகள் நடப்பதால் அவர்கள் தோல்விகளை சந்திக்கும் வாய்ப்பும் நிகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கி இருந்த குஜராத் அணி, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. பின்னர் மீண்டும் ஹைதராபாத் அணிக்காக வெற்றி பெற்ற குஜராத், அடுத்த இரண்டு போட்டிகளில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.

தொடர்ந்து ஒரு தோல்வியை கூட பெறாத ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட அவர்கள், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் கோட்டையை விட்டிருந்தனர். பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் கைப்பற்றி பட்டையை கிளப்பி இருந்த குஜராத் அணி, அதனை தொடர தவற, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களான சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். 170-க்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய ராஜஸ்தான் அணி, 196 ரன்கள் குவிக்க குஜராத் அணிக்கு தலைவலியாக போனது.

- Advertisement 2-

பவுலிங்கில் தவற விட்டதை பேட்டிங்கில் சரி செய்து விடலாம் என்ற நோக்கத்தில் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய குஜராத் அணி, மிக பொறுமையாக ரன் சேர்த்தனர். அப்படி ஒரு சூழலில், இறுதி கட்டத்தில் அதிக ரன்கள் வேண்டும் என்ற நெருக்கடியான நிலையும் உருவானது. கடைசி இரண்டு ஓவர்களில், 35 ரன்கள் தேவைப்பட, ரஷீத் கான் மற்றும் ராகுல் தெவாட்டியா மிக சிறப்பாக ஆடி கடைசி பந்தில் குஜராத்தை வெற்றி பெற செய்தனர்.

மேலும், ராஜஸ்தான் அணியை இந்த தொடரில் முதல் அணியாகவும் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் உற்சாகமான சுப்மன் கில், “நாங்கள் 3 ஓவரில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தோம். அது எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்க, கணக்குப்படி இரண்டு பேட்ஸ்மேன்களும் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டும். அதில் ஒரு பேட்ஸ்மேன் ஆக்ரோஷமாக ஆடினால் நிச்சயம் செய்து விடலாம் என்றும் தான் நினைத்தோம். நான் போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆனால், ரஷீத் மற்றும் ராகுல் ஆகியோர் எங்களுக்காக முடித்து வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி பந்தில் ஜெயிப்பது எப்போதுமே அருமையான உணர்வு தான். ரஷீத் கான் போன்ற ஒருவர் எப்போதுமே அணியில் வேண்டுமென நாம் நினைக்கக் கூடிய வீரர். அவர் ஒரு நல்ல போராளி” என சுப்மன் கில் கூறியுள்ளார்.

சற்று முன்