- Advertisement -
Homeவிளையாட்டுமுதல் மேட்ச்ல கோட்டை விட்டதை பிடிச்சுட்டோம்.. கடைசி மேட்ச்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு.. புதிர் போட்ட...

முதல் மேட்ச்ல கோட்டை விட்டதை பிடிச்சுட்டோம்.. கடைசி மேட்ச்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு.. புதிர் போட்ட கில்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவிற்கு எதிராக டி20 தொடரில் மோதி வருகிறது. இதன் நான்காவது போட்டி சமீபத்தில் நடந்திருந்த நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் சொந்தமாக்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ய, அதன்படி ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.

கேப்டன் சிக்கந்தர் ராசா சிறப்பாக ஆடி 28 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 46 ரன்கள் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

முந்தைய இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போது முதலில் பேட்டிங் செய்திருந்தது. தற்போது மீண்டும் ஒருமுறை டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்ய முதல் போட்டியை போல இலக்கை எட்ட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இந்த முறை இந்திய அணி எந்த தவறும் செய்யாமல் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்றிருந்தது.

தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகிய இருவருமே இலக்கை 16 வது ஓவரிலேயே எட்டி இருந்தனர். ஜெயஸ்வால் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 93 ரன்கள் எடுக்க, கேப்டன் கில் 58 ரன்கள் சேர்த்து இருந்தார். ஜிம்பாப்வே அணியால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

- Advertisement-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் கில், “இந்த சேசிங்கை குறித்து தான் நாங்கள் எப்போதும் பேசி வருகிறோம். முதல் போட்டியில் இதனைத் தான் எங்களால் செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த முறை அதனை சிறப்பாக செய்து விட்டோம். அதே வேளையில் எங்களது வேலை இன்னும் முடியவில்லை. இன்னும் ஒரு போட்டி பாக்கி இருப்பதால் அதிலும் சிறப்பாக ஆட வேண்டி உள்ளது.

அணியிலும், தொடக்க ஜோடியிலும் மாற்றங்கள் செய்வது பற்றி இன்னும் நான் பயிற்சியாளரிடம் எதுவும் பேசவில்லை. அடுத்த போட்டியின் டாஸின் போது அதை பற்றி கூறுகிறேன்” என கில் தெரிவித்தார்.

சற்று முன்