இந்திய அணியின் முன்னாள் செலக்ட்டர் ஒருவர் சுப்மன் கில் ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக கேப்டனாக வருவாரா என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஐபிஎல் 2023 க்கு பிறகு சுப்மன் கில்லின் புகழ் உலகம் முழுக்க பரவியது என்றே கூறலாம். அதே சமயம் அவர் இந்திய அணியின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரராகவும் மாறி உள்ளார்.
இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக களம் கண்டுள்ளார். இந்த ஐபிஎல்-க்கு பிறகு அவரை இந்திய அணியின் இளவரசர் என்ற வகையில் பலர் பார்க்க துவங்கியுள்ளனர். அதே சமயம் அவர் இந்திய அணியின் அடுத்த கேப்டனா என்றும் சிலர் கேட்கத் துவங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் செலக்ட்டர் புபேந்தர் சிங் அவர்கள் உண்மையில் சும்மா கில் ரோகித் சர்மாவிற்கு மாற்றாக இந்திய அணிக்கு கேப்டனாக வருவாரா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இது குறித்து அவர் கூறுகையில்,
சுப்மன் கில்ஒரு சிறப்பான வீரர். அதேசமயம் எதிர்கால இந்திய அணியின் ஒரு பேட்டிங் சென்சேஷனாகவும் அவர் தற்போது உள்ளார். ஆனால் அவர் இந்திய அணியின் கேப்டனாக வருவாரா என்பதை அவசரப்பட்டு இப்போதே கூறுவது சரியாக இருக்காது. ஏனென்றால் அவரை சிறந்த ஒரு பேட்டிங் லெசன்ட்டாக நாம் முதலில் பார்க்க வேண்டும்.
எல்லாமே சரியாக சென்றால் நிச்சயம் அவர் இந்திய அணியின் ஒரு பேட்டிங் சென்சேஷனாக மாறுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவரிடம் அந்த விளையாட்டும், ஆர்வமும், திறமையும் இருக்கிறது. இது எல்லாம் சீராக அப்படியே சென்றால் அவர் கேப்டனாக மாறுவதற்கான வாய்ப்பு வரலாம்.
ஏற்கனவே சுப்மன் கில் இந்தியாவின் அண்டர் 19 அணிக்கு கேப்டனாக இருந்தவர். ஆனாலும் இந்திய அணிக்கு கேப்டனாக வர இன்னும் அவருக்கு நிறைய அனுபவங்கள் தேவை. அதற்கு முன்பாக இந்திய அணியில் அவருக்கு நிரந்தரமான ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் செலக்ட்டரான புபேந்தர் சிங். இவர் இந்திய அணிக்கு 2005 முதல் 2008 வரை செலக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.