- Advertisement 3-
Homeவிளையாட்டு24 வயதில் குஜராத் அணி கேப்டன்.. இனி சுப்மன் கில் சாம்ராஜ்ஜியம் தான்.. ஐபிஎல் தொடரில்...

24 வயதில் குஜராத் அணி கேப்டன்.. இனி சுப்மன் கில் சாம்ராஜ்ஜியம் தான்.. ஐபிஎல் தொடரில் போடும் பிள்ளையார் சுழி.. அடுத்த டார்கெட் அதுதான்

- Advertisement 1-

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதற்காக நவ.26ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி அனைத்து அணிகளும் நேற்று மாலை பட்டியலை வெளியிட்டன.

இதனிடையே குஜராத் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் மும்பை அணிக்கு இடம்பெயர்வதாக தகவல் வெளியான நிலையில், குஜராத் அணியால் தக்க வைக்கப்பட்டார். இதனிடையே வீரர்களுக்கு இடையிலான டிரேடிங் நடக்க டிசம்பர் 12 தேதி வரை அவகாசம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை மும்பை அணியின் கேமரூன் க்ரீன் டிரேடிங் முறையில் ஆர்சிபி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல வேண்டும் என்று குஜராத் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

அதனால் அவரை டிரேடிங்கில் விட்டுக் கொடுத்ததாகவும் ஜிடி அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. கேன் வில்லியம்சன் மற்றும் சுப்மன் கில் இடையில் யார் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினார்கள்.

- Advertisement 2-

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள சுப்மன் கில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் ஐபிஎல் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக உருவாகியுள்ளார். இதனால் அவரின் கேப்டன்சி செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் அடுத்த ரன் மெஜினாக உருவாகி வரும் சுப்மன் கில், அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மூலம் சுப்மன் கில் இன்னும் அதிக அனுபவங்களை கேப்டன்சியில் பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

சற்று முன்