- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த 4 பேர் டீம்ல எதுக்கு.. கில்லின் குழப்பமான முடிவு.. இனிமே கேப்டன் ஆகவே முடியாது...

இந்த 4 பேர் டீம்ல எதுக்கு.. கில்லின் குழப்பமான முடிவு.. இனிமே கேப்டன் ஆகவே முடியாது போல..

- Advertisement-

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி இரண்டில் வெற்றி பெற்றாலும் கேப்டனாக சுப்மன் கில் எடுத்த சில முடிவுகள் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன் உள்ளிட்ட சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் திரும்ப வர, ரியன் பராக் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இந்த முடிவு தான் தற்போது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இருந்த அபிஷேக் ஷர்மா, மூன்றாவது போட்டியில் ஜெய்ஸ்வால் திரும்ப வந்ததால் அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேப்டன் கில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கியதுடன் அபிஷேக் ஷர்மாவை மூன்றாவது இடத்திற்கு மாற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நாலாவது வீரராக ருத்துராஜ் இறங்கி இருந்த நிலையில், ரியான் பராக் வாய்ப்பு இந்த மூன்றாவது போட்டியில் பறிபோயிருந்தது.

- Advertisement-

பேட்டிங்கை பொறுத்த வரையில் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை என்றாலும் இந்த மூன்றாவது போட்டியில் மட்டும் ஏறக்குறைய நான்கு தொடக்க வீரர்கள் அணியில் இடம்பிடித்திருந்தனர். முன்னதாக இரண்டாவது போட்டியில் மட்டும் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் தேர்வாக அவர் வாய்ப்பு கிடைக்காமலேயே மூன்றாவது போட்டியில் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

இதுவே பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி இருந்த சூழலில் தற்போது ரியான் பராகின் நாலாவது இடத்திற்கும் அப்படி ஒரு ஆப்பை தான் இந்திய நிர்வாகம் வைத்துள்ளது. முதல் போட்டியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்படி இருந்தும் அவர் தொடர்ந்து நான்காவது இடத்தில் ஆடிவர அதற்கு பழக்கமே இல்லாத ருத்துராஜை முயற்சி செய்து பார்த்த இந்தியாவின் முடிவும் கேள்விகளை எழுப்பி உள்ளது. அதே போல அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக சிறந்த ஃபார்மில் இருந்தாலும் அவரை 3 வது வீரராக கில் இறக்கியதும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஜெய்ஸ்வால், கில், அபிஷேக் ஷர்மா மற்றும் ருத்துராஜ் என நான்கு தொடக்க வீரர்களாக ஆடும் திறன் படைத்த வீரர்களை எதற்கு ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதில் மற்ற பந்து வீச்சாளர்களுக்கோ அல்லது ரியான் பராக உள்ளிட்ட வீரர்களுக்கோ வாய்ப்பை கொடுத்திருக்கலாம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்