- Advertisement -
கிரிக்கெட்

அந்த 2 பேரால தான்.. ஒரே ஒரு திருப்புமுனையால தோத்து போனோம்.. விரக்தியில் கில்..

முதல் எட்டு போட்டியில் நான்கில் வெற்றி பெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. இதனால் பத்து போட்டிகள் ஆடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அவர்கள் கடும் நெருக்கடியான சூழலிலும் தற்போது உள்ளனர். ஏறக்குறைய லீக் சுற்றின் இறுதி கட்டத்தை அனைத்து அணிகளும் எட்டிவரும் நிலையில் ஒவ்வொரு போட்டிகளும் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இப்படி இருந்தும் கடந்த இரண்டு சீசன்களிலும் இறுதி போட்டிக்கு முன்னேறி பலம் பொருந்திய குஜராத் அணி இந்த முறை திணறி வருவது அவரது ரசிகர்களை கடுமையாக ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அனைத்திலுமே நல்ல ஸ்கோருடன் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றை அவர்களால் நெருக்கடி இன்றி நினைத்து பார்க்கக் கூடிய நிலையும் உள்ளது.

- Advertisement -

இதனிடையே பெங்களூரு அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் 200 ரன்கள் அடித்த போதும் குஜராத் அணியால் வெற்றி பெற முடியவில்லை. பெங்களூர் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை முடித்திருந்த நிலையில் வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

அவருடன் பக்கபலமாக துணை நின்று ரன் சேர்த்த விராட் கோலி, எழுபது ரன்கள் அடிக்க அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் விக்கெட்டுகளை குஜராத் அணி எடுக்க தவறியதால், மற்றும் ஒரு தோல்வியை அவர்களால் சந்திக்க நேரிட்டது.

- Advertisement -

மீண்டும் ஒரு தோல்விக்கு பின்னர் விரக்தியில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் இது பற்றி பேசுகையில், “கோலி மற்றும் வில் ஜேக்ஸ் இணைந்து அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். அடுத்த போட்டியில் இருந்து இன்னும் சிறந்த திட்டங்களுடன் ஆட வேண்டும். அத்துடன் அதனை செயல்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

எப்போது நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக இருந்ததாகவே தோன்றும். 200 ரன்கள் கூட எங்களுக்கு போதுமானது என்று தான் நினைத்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களது வழியில் போட்டி செல்லவில்லை. மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. அது தான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என நான் நினைக்கிறேன்” என வேதனையுடன் கில் கூறினார்.

- Advertisement -

Recent Posts