- Advertisement -
Homeவிளையாட்டுகேப்டனா ஜெய்ச்ச முதல் மேட்ச்லயே ரோஹித்தை மிஞ்சிய கில்.. கோலி வரிசையில் சாதித்த இளங்கன்று..

கேப்டனா ஜெய்ச்ச முதல் மேட்ச்லயே ரோஹித்தை மிஞ்சிய கில்.. கோலி வரிசையில் சாதித்த இளங்கன்று..

- Advertisement-

சுப்மன் கில் இந்திய அணிக்காக தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றியிலேயே ரோஹித் ஷர்மாவை மிஞ்சி உள்ளதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய அணியை பொருத்தவரையில் ஏதாவது ஒரு பெரிய தொடரில் நிறைய வீரர்கள் ஆடி இருந்தால் அடுத்து வரும் சிறிய அணிகளுக்கு எதிரான தொடரில் நிறைய பேருக்கு ஓய்வளித்து அவர்களை எதிர்கொள்ள அனுப்புவார்கள்.

உதாரணத்திற்கு சமீபத்தில் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருந்த நிலையில் அதில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. இதனால் அந்த அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது. இவரது தலைமையில் குஜராத் அணி இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெரிதாக ஜொலிக்காமல் போக லீக் சுற்றுடன் முதல் முறையாக வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

நல்ல ஒரு பேட்ஸ்மேனாக கில் இருந்த போதிலும் கேப்டன்சியில் அவர் வகித்த வியூகங்கள் குஜராத்திற்கு கை கொடுக்காமல் போக தோல்வியடையும் சூழலும் உருவாகி இருந்தது. அவரைவிட ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் கேப்டன்சியில் கலக்கி இருந்த போதிலும் இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு ஜிம்பாப்வேவுக்கு எதிராக கில்லுக்கு தான் கிடைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 115 ரன்கள் கூட தொட முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்தது. ஆனால் அதே வேளையில் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை மிகச் சரியாக சுதாரித்து அதனை எளிதாக எதிர் கொண்ட இந்திய அணி 234 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து பந்து வீச்சிலும் முதல் போட்டியை போல பட்டையைக் கிளப்பியிருந்த இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement-

இந்த போட்டியில் கில் வகித்த பல திட்டங்கள் இந்தியாவிற்கு கைகொடுத்திருந்ததுடன் மட்டுமில்லாமல் கேப்டனாக தனது முதல் சர்வதேச வெற்றியையும் அவர் பெற்றிருந்தார். அப்படி ஒரு சூழலில் தான் தனது முதல் வெற்றியை முத்திரையாக மாற்றி உள்ள சுப்மன் கில்லின் சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய அணி டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹர்திக் பாண்டியா தலைமையில் தான்.

168 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் நியூஸிலாந்திற்கு எதிராக வெற்றி பெற்றிருந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 106 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக 93 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது தான் பெரிய வெற்றியாக கருதப்பட்டது. ஆனால் அதனை முந்தி உள்ள கில், 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தையும் ஒரு கேப்டனாக பிடித்துள்ளார். இதில் மற்றொரு சுவாரசியம் இந்த ஆறு பெரிய வெற்றிகளும் ஆறு கேப்டன்கள் இந்திய அணியை தலைமை தாங்கிய போது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்