- Advertisement -
Homeவிளையாட்டுகில் சதமடித்த மறுகணமே.. ஐபிஎல் தொட்ட முக்கியமான மைல்கல்.. சிஎஸ்கே கூட தான் நடக்கணுமா..

கில் சதமடித்த மறுகணமே.. ஐபிஎல் தொட்ட முக்கியமான மைல்கல்.. சிஎஸ்கே கூட தான் நடக்கணுமா..

- Advertisement-

குஜராத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் சமீபத்தில் ஆடி முடித்திருந்த போட்டி மிகப் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணி உள்ளது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஏற்கனவே மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டு வந்த சூழலில், இத்துடன் அந்த அணியின் தொடக்க ஜோடியும் இதுவரை ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை கூட வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இப்படி பல பிரச்சினைகள் அணிக்குள் இருக்கும் நிலையில் தான் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் குஜராத் அணியையும் சிஎஸ்கே எதிர்கொண்டது. ரச்சின் ரவீந்திரா பல போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை அணியில் இடம் பெற்றிருக்க, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களுக்கு பறக்க விட்டிருந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அவர்கள் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுக்க, சாய் சுதர்சன் மற்றும் கில் என இருவருமே 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மட்டும் இல்லாமல் சதம் அடித்தும் அசத்தி இருந்தனர். இதன் காரணமாக பல்வேறு சாதனைகளும் ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஆடி இருந்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்களே எடுத்திருந்தது.

மொயீன் அலி மற்றும் டேரில் மிட்செல் மட்டும் அரை சதங்களை அதிரடியாக கடக்க, வேறு எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்கவில்லை.அந்த அணி முதல் 10 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளையும் இழக்க வழக்கம் போல ரஹானே மற்றும் ரவீந்திரா ஆகியோர் இந்த முறையும் சொதப்பி சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

- Advertisement-

அதுமட்டுமில்லாமல் நல்ல ஃபார்மில் இருந்து வந்த ருத்துராஜூம் 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாக மொயீன் மற்றும் மிட்செல் தான் சிஎஸ்கே அணி நல்ல ஸ்கோரையாவது எட்ட உதவினார். 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க, குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் தான் இந்த போட்டியில் கில் சதமடித்த சமயத்தில் நடந்த அசத்தலான விஷயம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். முதல் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே முதல் சதத்தை அடித்து இருந்தார் ப்ரெண்டன் மெக்கல்லம். அப்படி இருக்கையில், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 100 வது சதமாக கில்லின் சதம் மாறி, முக்கியமான மைல்கல்லையும் இந்த டி 20 லீக் எட்டி உள்ளது.

சற்று முன்