- Advertisement -
Homeவிளையாட்டுஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத சுப்மன் கில் பெயர்.. அதிரடியாக மாற்றம் செய்து லிஸ்ட்...

ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத சுப்மன் கில் பெயர்.. அதிரடியாக மாற்றம் செய்து லிஸ்ட் வெளியிட்ட நிர்வாகம்.. நடந்தது என்ன?

- Advertisement-

கடந்த சில நாட்களாகவே இந்திய ரசிகர்கள் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது ஆசியக் கோப்பைக்காண இந்திய அணி எப்போது வெளியாகும் என்பதுதான். இந்த நிலையில் இன்று பிசிசி ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

இந்திய அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் எந்த வரிசையில் ஆடப்போகிறார்கள் போன்ற பல குழப்பங்கள் ஏற்கனவே நிலவி வந்த நிலையில், அணியின் அறிவிப்பின்போதும் இது போன்ற குழப்பங்கள் நீடித்தது குறிப்பிடுவது.

17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியான போது அதில் சுப்மன் கில்லின் பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக சும்மன் கில் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ஒன்று 1.26க்கு வெளியானது.

அதே சமயம் அடுத்த சில நிமிடங்களில் அதாவது 1.34க்கு வெளியான செய்தியில் சுப்மன் கில் ஆசிய கோப்பை அணியில் இடம் பெறுகிறார் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்த எட்டு நிமிட இடைவெளியில் பலரும் சுப்மன் கில் இந்திய அணியில் இல்லை என்ற செய்தியை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement-

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தான் இந்த தகவலை நேரலையில் தவறாக வெளியிட்டு பிறகு அதை திருத்தி மாற்றியது. அந்த இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் சுப்மன் கில் இல்லை என்ற மீம்கள் பரவா துவங்கிவிட்டது.

சஞ்சு சாம்சன் இந்த அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விகள் பலரது மனதிலும் இருந்தது. அந்த வகையில் இந்த அணிகள் சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக உள்ளார். அதேபோல் இளம் வீரரான திலக் வர்மாவிற்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக இதில் நீடிக்கிறார்.

ஆசியக் கோப்பை இந்திய அணி : ரோஹித் சர்மா, , ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா. பேக் அப் வீரர்: சஞ்சு சாம்சன்

சற்று முன்