- Advertisement -
Homeவிளையாட்டுநான் எந்த தவறும் செய்யவில்லை.. ஆனால் ஏன் இப்படி நடந்தது என தெரியவில்லை- கில் வேதனை

நான் எந்த தவறும் செய்யவில்லை.. ஆனால் ஏன் இப்படி நடந்தது என தெரியவில்லை- கில் வேதனை

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர்ந்து தடுமாறி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தினார். டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பிய கில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே அரை சதம் கடந்தார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கியதில் முதல் மூன்று போட்டிகளில் 3, 7,6 ஆகிய ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் பலரும் கில்லை கடுமையாக விமர்சித்தனர். கில் அகமதாபாத் ஆடுகளத்தை தவிர வேறு எங்கும் சிறப்பாக விளையாட மாட்டார் என்றும் கேலி செய்து கொண்டனர்.

- Advertisement -

இதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் கில் 77 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த நிலையில் தாம் டி20 தொடரில் தடுமாறியது குறித்து கில் மௌனத்தை கலைத்தார்.

அதில் ரன்கள் வராத சமயத்தில் நாம் அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதில் நாம் ஏதேனும் தவறு செய்தோமா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்தத் தொடரில் நான் எந்த தவறையும் செய்யவில்லை.

- Advertisement-

என்னுடைய ஷார்ட் தேர்விலும் தவறு இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நான் ரன்கள் எடுத்ததை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் உடனடியாக ஆட்டம் இழந்து வந்தேன். டி20 கிரிக்கெட்டில் நிலையே இதுதான்.

நாம் அடிக்கும் மூன்று அல்லது நான்கு நல்ல ஷாட் கூட ஃபீல்டர்களிடம் கேட்ச் ஆக பிடிப்பட வாய்ப்பு இருக்கிறது. இங்கே உங்களுக்கு யோசிக்க நேரம் கூட கிடையாது.

அதே சமயம் நீங்கள் அதிவேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். அப்படி இருக்கும் போது உங்களுக்கு எந்த ஷாட் ஆடினால் ரன் கிடைக்குமோ அந்த ஃபார்முலாவை தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அது நீங்கள் ஆட்டம் இழக்கவும் நேரிடலாம் என்று கில் கூறினார். ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 890 ரகளை குவித்த கில், அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து தடுமாறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்க்கும் முன்பு இல் பானுக்கு திரும்புவார்.

சற்று முன்