- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே-வை ஜெயிப்போம் என வாய் பேசிய கில்லை திணற திணற தடுமாற வைத்து தட்டி தூக்கிய...

சிஎஸ்கே-வை ஜெயிப்போம் என வாய் பேசிய கில்லை திணற திணற தடுமாற வைத்து தட்டி தூக்கிய சி.எஸ்.கே – இதெல்லாம் நமக்கு தேவையா என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

- Advertisement-

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் சேர்த்திருந்தது. குஜராத் போல பேட்டிங் வலிமை உள்ள அணியை சமாளிக்க இந்த ஸ்கோர் போதுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பௌலர்களின் அபாரமான பந்து வீச்சு நன்றாக கை கொடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் பில்லராக இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்தவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில். அதனால் எதிரணி பவுலர்களின் முதல் குறியாக அவர்தான் இருந்து வந்தார். நேற்றைய போட்டியில் அவர் பல ஓவர்களை எதிர்கொண்டாலும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தது தோனியின் கேப்டன்சி.

இந்த போட்டியில் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 14 ஆவது ஓவர் வீசிய தீபக் சஹார் பந்தில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து சுப்மன் கில் ஐந்தாவது விக்கெட்டாக அவுட் ஆகி வெளியேறியது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டிக்குப் பிறகு பேசிய கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ப்ளே ஆஃபில் நிச்சயம் வெல்வோம் என நம்பிக்கையோடு கூறியிருந்தார். அன்று பேசிய போது “நான் இப்போது நல்ல பார்மில் இருக்கிறேன். டி 20 கிரிக்கெட்டில் கிடைக்கும் நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸ்களாக மாற்றுவது முக்கியம்.

- Advertisement-

இந்த சீசனின் தொடக்கத்தில் எனக்கு அது அமையவில்லை. ஆனால் தொடரின் இறுதியில் பெரிய இன்னிங்ஸ்கள் கிடைக்கின்றன. ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள ஆவலாக உள்ளோம்.

இதையும் படிக்கலாமே: வாஷ் அவுட் ஆன குஜராத். வச்சி செய்து அனுப்பிய சென்னை.

சென்னை மைதானத்துக்கு ஏற்ற பவுலிங் அட்டாக் எங்களிடம் உள்ளது. சென்னை அணியை வென்று இரண்டாவது முறையாக பைனலுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியிருந்தார். எனவே இப்போது சுப்மன் கில்லை சிஎஸ்கே ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். நேற்றைய போட்டியை பொறுத்தவரை குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடதக்கது.

சற்று முன்