- Advertisement -
Homeவிளையாட்டுசுப்மன் கில் அவுட் விவகாரம். ஐசிசி விதி சொல்வது என்ன? அவர் அவுட்டா இல்லையா? முழுமையான...

சுப்மன் கில் அவுட் விவகாரம். ஐசிசி விதி சொல்வது என்ன? அவர் அவுட்டா இல்லையா? முழுமையான தகவல்

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது தற்போது போட்டியின் கடைசி நாளான ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இன்று இந்திய அணி 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட்டை கைப்பற்றினால் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நிலையில் உள்ளது. எனவே இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கையில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனாலும் இந்த துவக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் சுப்மன் கில் ஆட்டம் இழந்து வெளியேறிய விதம்தான் தற்பொழுது அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த நிலையில், முடிவு மூன்றாவது அம்பயரிடம் சென்றது.

மூன்றாவது அம்பயரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு பந்தை கேமரூன் கிரீன் பிடித்திருக்கிறார் என்று அவுட் கொடுத்துள்ளார். ஆனால் ஒருபுறம் பார்க்கையில் பந்து சரியாக பிடித்தது போலவும் மறுபுறம் பந்து தரையில் பட்டது போலவும் சில புகைப்படங்கள் வெளியாகி அவர் அவுட் இல்லை என்று ரசிகர்கள் அனைவரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement-

இந்நிலையில் இந்த விக்கெட் குறித்த ஐசிசி-யின் சில விதிகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் ஐசிசி-யின் 33.2 விதிப்படி, பீல்டரின் கைகளில் பால் இருந்து, கை கிரௌண்டில் பட்டிருந்தாலும் அந்த கேட்ச் அவுட் ஆகவே கருதப்படும். நேற்றைய சம்பவத்தை பொறுத்தவரை கிரீனின் கைகளில் பந்து இருந்து கை விரல்கள் தரையில் பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நடுவரின் முடிவால் தலையில் அடித்துக்கொள்வது போல சுப்மன் கில் வெளியிட்ட பதிவு. பங்கமாக கலாய்த்து வாசிம் ஜாபர் வெளியிட்ட ட்வீட்

அதேபோன்று 33.2.2.1 என்ற விதிமுறைப்படி : பந்து கேட்ச் பிடிக்கப்பட்ட பிறகு ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டாலும் பந்து கைக்குள் இருந்தால் அது அவுட் என்றும் அறிவிக்கப்படும். அந்த வகையில் தான் கேமரூன் கிரீன் பந்தை கீழே விழாமல் பிடித்தபோது இரண்டு விரல்களுக்கு இடையே நடுவில் இருந்த பந்து தரையில் பட்டாலும் அவர் முழு கண்ட்ரோலுடன் இருந்ததால், 33.2.2.1 விதிமுறைப்படி கில்லுக்கு அவுட் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சற்று முன்