- Advertisement 3-
Homeவிளையாட்டுஅபிஷேக், ருத்து பேட்டிங் செஞ்சப்போ இந்த பிரச்சனை இருந்துச்சு.. முதல் மேட்ச் தோத்தது இதுனால தான்.....

அபிஷேக், ருத்து பேட்டிங் செஞ்சப்போ இந்த பிரச்சனை இருந்துச்சு.. முதல் மேட்ச் தோத்தது இதுனால தான்.. கில் வெளிப்படை..

- Advertisement-

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடையும் என யாருமே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கில் தலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, பெரிய அளவில் ஜொலிக்காமல் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

இதில், கில்லின் கேப்டன்சியும் பெரிய அளவில் எடுபடாமல் போக, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் அவர் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ரோஹித் ஷர்மா டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்க, ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட பலருக்கும் இந்த டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

- Advertisements -

இதனால், இந்திய அணியை வழிநடத்தி தனது கேப்டன்சி திறன் என்ன என்பதை நிரூபிக்க பொன்னான வாய்ப்பும் கில்லிற்கு கிடைத்திருந்தது. ஆனால், முதல் போட்டியில் பவுலிங்கில் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தாலும், பேட்டிங்கில் வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் போனது தோல்வியையும் தழுவ செய்தது.

இதனால், வரும் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் கடும் நெருக்கடி உருவாகும் என்பதால் கவனத்துடன் அவர்களை எதிர்கொள்ளவும் இந்திய அணி திட்டம் போட்டிருந்தது. பந்து வீச்சில் முதல் போட்டியில் பட்டையைக் கிளப்பி இருந்த இந்திய அணி, பேட்டிங்கில் செய்த சில தவறுகளை திருத்தி 2வது போட்டியில் ஆட, 234 ரன்களையும் அவர்கள் சேர்த்திருந்தனர்.

- Advertisement-

அபிஷேக் ஷர்மா சதமடித்து சாதனை புரிய, ருத்துராஜூம் அவருடன் பக்க பலமாக இணைந்து 77 ரன்கள் சேர்த்திருந்தார். இதனையடுத்து ஆடியிருந்த ஜிம்பாப்வே அணியால் ரன் சேர்க்க முடியாமல் போக, 134 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டாகி இருந்தனர். இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற, தொடரிலும் தற்போது விறுவிறுப்பான கட்டம் உருவாகி உள்ளது.

இதனிடையே, வெற்றிக்கு பின் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் கில், “இந்த வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது சந்தோஷத்தை கொடுக்கிறது. அபிஷேக் ஷர்மா மற்றும் ருத்துராஜ் ஆகியோர் பேட்டிங் செய்தது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் பவர் பிளேவில் பந்து அதிகம் திரும்பிய போது அதனை அற்புதமாக இரண்டு பேரும் எதிர்கொண்டு ரன் சேர்த்தனர்.

முதல் போட்டியில் அதிக இளம் வீரர்கள் இருந்ததுடன் சர்வதேச அனுபவமே இல்லாதவர்களும் இருந்ததால் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தோம். அப்படி உருவான நெருக்கடி உண்மையில் நல்ல விஷயமாக தான் இருந்துள்ளது. இதனால், அடுத்த போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கும் தயாராக இருந்தோம்.

இன்னும் 3 போட்டிகள் பாக்கி இருக்க, அதன் மீதும் கவனம் செலுத்த.உள்ளோம். வரும் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் இதே போன்று நெருப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆப்ஷன்களே இல்லாமல் இருக்கும் போது இது போன்ற நிறைய ஆப்ஷன்கள் இருப்பதும் நல்ல விஷயம் தான்” என கில் கூறி உள்ளார்.

சற்று முன்