- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்கிட்ட ஒழுக்கம் கத்துக்க வந்தேன்.. சீண்டி பார்த்த ரசிகர்கள்.. கொழுத்தி போட்ட சுப்மன் கில்..

ரோஹித்கிட்ட ஒழுக்கம் கத்துக்க வந்தேன்.. சீண்டி பார்த்த ரசிகர்கள்.. கொழுத்தி போட்ட சுப்மன் கில்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றிற்கு 7 அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் இன்னும் ஒரே ஒரு இடம் மட்டும் பாக்கி உள்ளது. அதற்கு பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்று தகுதி பெறும் என தெரிகிறது. ஆனால், அதே வேளையில் வங்காளதேச அணி தான் அதிக ரன் ரேட்டுடன் விளங்குவதால் அவர்களுக்கான வாய்ப்பு தான் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் ஒரே பிரிவிலும், இன்னொரு பக்கம் வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களிலுமே அசத்தலான அணிகள் இடம்பெற்று இருப்பதால் ஒவ்வொரு போட்டியும் இனிமேல் அனல் பறக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு கொஞ்சம் கூட சாதகம் இல்லாத அமெரிக்க மைதானங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில் இனி வரும் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதால் நிச்சயம் பேட்டிங்கும் பட்டையை கிளப்பும் என்று தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்குள் ஒரு சில விரிசல் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டி20 உலக கோப்பை இந்திய அணி இடம் பெறுவார் என எதிர் பார்க்கப்பட்ட சுப்மன் கில், ரிசர்வ்டு வீரர்கள் பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தார்.

- Advertisement 2-

ரிங்கு சிங், ஆவேஷ் கான் போல அவரும் ரிசர்வ்டு வீரராக இருக்க இந்திய அணி பயிற்சி செய்த போதெல்லாம் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மற்ற ரிசர்வ்டு வீரர்கள் இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட, கில் மட்டும் அமெரிக்காவை சுற்றி பார்த்ததுடன் தனது வணிக ரீதியிலான விஷயங்களிலும் ஈடுபட்டு வந்ததாக சர்ச்சையான தகவல்கள் வெளியாகியிருந்தது.

அது மட்டுமில்லாமல் லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் தருவாயில், கில்லை இந்தியாவிற்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும் இளம் வீரரின் ஒழுங்கு நடவடிக்கை சரி இல்லை என்றும் பல்வேறு சர்ச்சை தகவல்களாக வெளிவந்த வண்ணம் இருந்தது.

அப்படி இருக்கையில் ரிசர்வ்டு வீரர்களின் தேவை இனிமேல் இருக்காது என்பதால் தான் கில், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து உறுதியான தகவல்களும் கிடைத்திருந்தது. இதனால், கில் பற்றிய எந்தவித தகவலில் உறுதியில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை என தகவல்கள் பரவ, கில் சமீபத்தில் பகிர்ந்த பதிவு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரோஹித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கில், அவரிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வந்ததாக தன் மீதான வதந்திக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சற்று முன்