- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் செம போர்ம்ல இருக்கன். சென்னைக்கு எதிராக எங்களுடைய பௌலிங் அட்டாக் வேற மாதிரி இருக்கும்....

நான் செம போர்ம்ல இருக்கன். சென்னைக்கு எதிராக எங்களுடைய பௌலிங் அட்டாக் வேற மாதிரி இருக்கும். சுப்மன் கில் சூளுரை.

- Advertisement 1-

நேற்றைய கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணி நிர்னயித்த 198 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி எந்தவித பதற்றமுமின்றி எளிதாக எட்டியது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 52 பந்துகளில் விளாசிய அபாரமான சதம்தான்.

அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். போட்டி முடிந்த பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற கில் பின்வருமாறு கூறினார்.

“நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன். டி 20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றுவது முக்கியமானது. ஐபிஎல்-ன் முதல் பாதியில், அந்த பெரிய இன்னிங்ஸகளை அடிக்க தவறி, வெறும் 40, 50 ரன்கள் மட்டுமே என்னால் குவிக்க முடிந்தது. ஆனால் ஐபிஎல் இறுதியில் இந்த பெரிய இன்னிங்ஸ்கள் எனக்கு கை கொடுத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து ஷாட்களை ஆட வேண்டும். அனால் சில நேரங்களில் அது கேட்ச்-ஆக மாறும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் தொடர்ந்து உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் ஆடவேண்டும். அது தான் மிகவும் முக்கியம்.

- Advertisement 2-

புதிய பதில் பந்தில் க்ரிப் இருந்தது ஆனாலும் போக போக பேட்டிங் செய்வதாதற்க்கு பிட்ச் ஏதுவாக அமைந்தது. அதே சமயம் சிறிது நேரத்தில் பந்து ஈரமாகி இருந்ததால் எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச கடினமாக இருந்தது.  விஜய் சங்கர் உள்ளே வரும்போது மிகக் கடுமையாக அடிக்க முயன்றார். நான் அவரிடம் பொறுமையாக இருக்க சொன்னேன். பந்துகளை சரியாக டைம் பண்ண சொன்னேன்.

இதையும் படிக்கலாமே: பதிரனா பற்றி தோனி சொன்னதை ஏற்க முடியாது. அவருக்கு எது நல்லதுனு நான் சொல்றன். எனக்கும் பதிரனாவுக்கும் ஒரே ஆக்‌ஷன் தான். லசித் மலிங்கா பேச்சி

எனது ஆட்டம் என்ன என்பதை நான் அறிவேன், அதற்கு தயாராக இருப்பது எனக்கு முக்கியம். எந்தவொரு வீரருக்கும், நீங்கள் எந்த வகையான வீரர் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம், பின்னர் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ப்ளே ஆஃபில் சென்னைக்கு எதிராக சென்னையில் விளையாட இருப்பது ஆவலாக உள்ளது. எங்களிடம் சென்னை மைதானத்திற்கு ஏற்றவாறான சிறப்பான ஒரு பௌலிங் அட்டாக் உள்ளது. நாங்கள் சென்னையை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறை பைனலிற்க்கு வருவோம் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

சற்று முன்