ஐபிஎல் 16வது சீசன் மூலமாக உலக கிரிக்கெட்டின் சிறந்த இளம் பேட்டர்களில் ஒருவராக ஷுப்மான் கில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ஐபிஎல்-க்கு முன்பாகவே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரின் மூலம் தனது உச்சபட்ச பார்மை எட்டியுள் இவர் இந்திய அணியின் அடுத்த கோலியாக உருவாகி வருகிறார்.
23 வயதாகும் கில் ஐபிஎல் ஆரஞ்சு தொப்பியை 17 போட்டிகளில் 890 ரன்களை (மூன்று சதங்கள் உள்பட) அடித்ததன் மூலம் கைப்பற்றினார். ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த ஜோஸ் பட்லரின் சாதனையை கில் முறியடித்து கோலிக்கு(973) அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதன் மூலம் இளம் தொடக்க ஆட்டக்காரரான அவர் விரைவில் வரவிருக்கும் WTC இறுதிப் போட்டியிலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ODI உலகக் கோப்பையிலும் இந்தியாவின் முக்கிய வீரராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் நம்பப்படுகிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டியை முடித்துக் கொண்டு, ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதற்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள மற்ற அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கில். இந்த தொடரில் இவர் ரோஹித் ஷர்மாவோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் கில்லுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இந்திய ஸ்பைடர் மேன் கதாபாத்திரமான பவித்ர் பிரபாகருக்கு இந்தியிலும், பஞ்சாபி மொழியிலும் டப்பிங் பேசியவர் கில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் குறித்து கில் பேசுகையில், நான் சிரியவயதில் பார்த்த முதல் சூப்பர் ஹீரோ படம் ஸ்பைடர் மேன் தான். எப்போதும் அதற்க்கு ஒரு தனி இடம் உண்டு என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: சிஎஸ்கேவா இல்ல மும்பையா? யாரு பெஸ்ட்? காருக்குள் நடந்த விவாதம். பதில் சொல்ல முடியாமல் திணறிய பொல்லார்ட், தன்னோட கெத்தை காட்டிய பிராவோ.
இந்நிலையில் கில்லுக்கு ஸ்பைடர் மேனின் பவர்கள் வழங்கப்பட்டால் அவர் என்ன செய்வார் என்று நெறியாளர் கேட்டதற்கு. அதற்கு அவர் ‘ஸ்பைடர் மேன் போன்றே கட்டிடங்களை தாண்ட விரும்புவதாகக்’ கூறினார். அதன் பின்னர் ஒரு நாள் ஸ்பைடர் மேனாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அப்படி ஒரு வாய்ப்பிருந்தால் நான் உலகக்கோப்பை பைனலில் ஒரு நாள் ஸ்பைடர் மேனாக இருந்து ஸ்பைடர் மேன் சக்தியை பயன்படுத்தி கேட்ச்களை பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.