Homeகிரிக்கெட்கில்லின் தற்போதைய நிலை என்ன?.. இன்னும் எத்தனை போட்டிகள் விளையாட மாட்டார்... பிசிசிஐ சோர்ஸ் சொன்ன...

கில்லின் தற்போதைய நிலை என்ன?.. இன்னும் எத்தனை போட்டிகள் விளையாட மாட்டார்… பிசிசிஐ சோர்ஸ் சொன்ன தகவல்

-Advertisement-

உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரையும் வெற்றிகரமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாளை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மைதானத்தில் விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தொடக்க வீரர் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாததால், அவர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி சென்ற இந்திய வீரர்களுடன் சுப்மன் கில் விமானம் ஏறவில்லை.

-Advertisement-

அதற்கு மாறாக சென்னையில் உள்ள ஹோட்டலிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து பிசிசிஐ மிகப்பெரிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் சுப்மன் கில்லின் பிளேட்லெட்ஸ் 70 ஆயிரத்திற்கும் கீழ் சென்றதாகவும், அதன் காரணமாக உடனடியாக முக்கிய பரிசோதனைகளை செய்ய ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

வழக்கமாக மனித உடலில் ஒரு லட்சம் பிளேட்லெட்களுக்கு கீழ் சென்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதனாலேயே சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் பிசிசி-ஐ சோர்ஸ் ஒருவர் கூறியுள்ளார்.

-Advertisement-

இப்படியான சூழலில் ஆஃப்கானிஸ்தான் போட்டி மட்டுமல்லாமல் பாகிஸ்தான் போட்டியிலும் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு சரியாகி, பிளேட்லெட் எண்ணிக்கை சரியானாலும் உடலில் அதிகப்படியான சோர்வு இருக்கும். ஒருவேளை அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், பெரிதாக பயிற்சியில் ஈடுபடாமல் நேரடியாக அகமதாபாத் சென்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்குபெறுவது சிரமம் என்று கூறப்படுகிறது.

இதனால் சுப்மன் கில் விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகம் அவசரப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஷான் கிஷனே அடுத்தடுத்த போட்டிகளில் தொடக்கம் கொடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

-Advertisement-

சற்று முன்